சென்னையில் டீம் மீட்டிங்கில் கலந்துகொண்ட தோனி. மெகா ஏலத்தில் எடுக்கப்போகும் – வீரர்கள் யார்?

Dhoni
- Advertisement -

இந்தியாவில் வருகிற மார்ச் மாதம் இறுதியில் துவங்கி மே மாதம் இறுதிவரை 15-வது ஐபிஎல் தொடரானது நடைபெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது இந்த ஐபிஎல் தொடருக்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கிடையில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது.

CSK-2

- Advertisement -

இந்த மெகா ஏலத்திற்கு முன்னர் ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம் என்கிற அடிப்படையில் சென்னை அணியானது ஜடேஜா, தோனி, மொயின் அலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரை தக்கவைத்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற இருக்கும் இந்த மெகா ஏலத்தில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து சிஎஸ்கே நிர்வாகம் மீட்டிங் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. அதில் கலந்துகொண்ட சென்னை அணியின் கேப்டன் தோனி நேற்று சென்னை வந்திருந்தார்.

CSk

இந்நிலையில் இந்த ஏலத்தில் யார் யாரை தேர்வு செய்யப்போகிறார்கள் என்பது பற்றி நடைபெற்ற அந்தக் கலந்துரையாடலில் சென்னை அணி ஏற்கனவே நான்கு வீரர்களை தக்க வைத்ததன் படி 42 கோடி ரூபாயை செலவு செய்ததால் மீதமுள்ள 48 கோடி ரூபாயில் வீரர்களை வாங்க உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட டூபிளெஸ்ஸிஸ், பிராவோ, தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், அம்பத்தி ராயுடு ஆகியோர் மீண்டும் ஏலத்தில் எடுக்க தோனி மற்றும் நிர்வாகம் ஆகியோரிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தள்ளாடும் இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்ற இணைக்கப்பட்ட ஜாம்பவான்கள் – இனி அதகளம் தான்

மேலும் தோனி பங்கேற்குப்போகும் கடைசி ஐபிஎல் தொடராக இது இருக்கும் என்பதால் இந்த தொடரில் இருந்து ஜடேஜா கேப்டனாக செயல்படவும் இந்த கூட்டத்தின்போது பேசப்பட்டதாக ஒரு தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement