தள்ளாடும் இலங்கை கிரிக்கெட்டை காப்பாற்ற இணைக்கப்பட்ட ஜாம்பவான்கள் – இனி அதகளம் தான்

sl
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. வரும் பிப்ரவரி 11 முதல் 20 வரை நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இதே ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 தொடருக்கு தயாராகும் வண்ணம் இந்த தொடரில் இலங்கை பங்கேற்க உள்ளது.

sl

- Advertisement -

தவிக்கும் இலங்கை:
ஒரு காலத்தில் சனத் ஜெயசூர்யா, மஹேல ஜெயவர்தனே, குமார் சங்ககாரா, சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன் என உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நிறைந்திருந்த இலங்கை அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா போன்ற உலகின் எந்த ஒரு டாப் அணியையும் மிரட்டக்கூடிய ஒரு அணியாக வெற்றிநடை போட்டது. ஆனால் மேற்கூறிய வீரர்கள் ஓய்வுக்குப்பின் அவர்களுக்கு நிகரான வீரர்கள் கிடைக்காததால் கடந்த 2015க்கு பின் உலகத்தரம் அணியாக இருந்த இலங்கை ஒரு கத்துக்குட்டி அணியாக மாறிவிட்டது.

சொல்லப்போனால் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஐசிசி டி20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி இன்று டி20 உலககோப்பையின் பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்றில் பங்கேற்பதற்காக நமிபியா, ஸ்காட்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளுடன் முதல் சுற்றில் போட்டிபோட வேண்டிய நிலைமைக்கு தரம் தாழ்ந்து விட்டது.

Malinga-1

களமிறக்கப்பட்ட லசித் மலிங்கா :
“எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே” என்ற நிலையில் தள்ளாடும் இலங்கை கிரிக்கெட் அணியின் நிலைமை இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களிடையே ஒரு மோசமான உணர்வைத் தருகிறது என்றால் மிகையாகாது. ஏனென்றால் எப்போதுமே ஒரு நல்ல போட்டி கிடைக்க வேண்டும் என்றால் அதில் பங்கேற்கும் எதிராளியும் பலமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

இந்நிலையில் தடுமாறும் இலங்கை அணியை தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் இலங்கையின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது “இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் யுக்திகளை வழங்கும் பயிற்சியாளராக அந்த அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா” நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

malinga

கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணியின் கேப்டனாக இருந்த லசித் மலிங்கா சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரு மகத்தான வேகப்பந்து வீச்சாளர் ஆவார். அத்துடன் ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பவுலராக விளையாடிய இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த அணியின் “பாஸ்ட் பௌலிங் ஆலோசகராகவும்” செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

- Advertisement -

அந்த அளவுக்கு தரமும் அனுபவமும் கொண்ட மலிங்காவை தற்காலிகமாக இந்த ஆஸ்திரேலிய தொடருக்கு மட்டும் இந்த பதவியில் நியமித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த முடிவின் வெற்றி மிகச்சிறப்பாக இருக்குமேயானால் வருங்காலத்தில் நீண்டகால பயிற்சியாளராகவும் மலிங்கா நியமிக்கப்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

இதையும் படிங்க : கேப்டன்ஷிப் என்பது என்ன தெரியுமா? ராகுலிடம் அது சுத்தமா இல்ல – விளாசியா முன்னாள் வீரர்

இந்த நியமனம் பற்றி மலிங்கா, “நம்மிடம் மிகச்சிறந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு எனது அனுபவத்தின் வாயிலாக உதவி செய்யக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து மகிழ்கிறேன்” என கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல் இந்த ஆஸ்திரேலிய தொடருக்காக அந்த அணியின் தற்காலிக பயிற்சியாளராக முன்னாள் வீரர் ருமேஷ் ரத்னாயகே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே 2022ஆம் ஆண்டு முழுக்க இலங்கை அணியின் ஆலோசகராக அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் மகிளா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement