கேப்டன்ஷிப் என்பது என்ன தெரியுமா? ராகுலிடம் அது சுத்தமா இல்ல – விளாசியா முன்னாள் வீரர்

Rahul-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டின் கேப்டனாக இருந்த விராட் கோலி அந்த பதவிகளில் இருந்து படிப்படியாக விலகி தற்போது மீண்டும் இந்திய அணியில் சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக இருந்த அவர் ஒரு உலககோப்பையை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனங்களால் முதலில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதை சாதகமாக பயன்படுத்திய பிசிசிஐ அவரை ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமான கேப்டனாக இருந்த போதிலும் டெஸ்ட் கேப்டன் பதவிக்கும் “குட் பை” கூறிவிட்டார்.

- Advertisement -

கேஎல் ராகுல் கேப்டன்:
முன்னதாக இந்தியாவின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ள நிலையில் டெஸ்ட் போட்டியிலும் அவரே கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதால் காலியாக இருந்த துணை கேப்டன் பதவியில் கேஎல் ராகுல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது 34 வயதை கடந்துவிட்ட ரோகித் சர்மா இன்னும் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் ஓய்வு பெறும் பட்சத்தில் இந்தியாவின் அடுத்த கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என்பதால் தற்போது முதலே அவருக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டு வருங்கால கேப்டனாக வளர்க்கப்படுகிறார் என ஏற்கனவே தேர்வுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Rahul

என்னத்த கண்டீர்:

- Advertisement -

இந்நிலையில் திடீரென எதற்காக கேஎல் ராகுல் கேப்டனாக வளர்க்க தேர்வு குழுவினர் நினைக்கிறார்கள் என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், “முதலில் ராகுலிடம் கேப்டனாக எந்த தகுதியை தேர்வு குழுவினர் கண்டார்கள்? திடீரென ஏன் அவரை வருங்கால கேப்டனாக வளர்க்க நினைக்கிறோம் என கூறுகிறார்கள். ஒரு கேப்டனை எவ்வாறு வளர்க்க முடியும் என எனக்கு புரியவில்லை. ஏனெனில் கேப்டன்ஷிப் என்பது இயற்கையிலேயே இருக்கக்கூடிய ஒரு தலைமை பண்பாகும்.

கேப்டன்ஷிப் என்பது ஒருவரிடம் இயற்கையிலேயே இருக்கக்கூடிய தன்மையாகும். ஒருவரை கேப்டனாக வளர்ப்பது சாத்தியம்தான், ஆனால் அதற்கு மிகவும் நீண்ட காலம் தேவைப்படும். அதற்கு குறைந்தது 20 முதல் 25 போட்டிகள் கேப்டன்ஷிப் செய்த பின்னரே முடிவு எடுக்கும் அனுபவம் கிடைக்கும். ஆனால் அப்போதும் கூட அவரிடமிருந்து கியாரண்டியாக வெற்றியை எதிர்பார்க்க முடியாது. இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானதாகும்”

- Advertisement -

Rahul-1

ஒருவரை கேப்டனாக வளர்ப்பது என்பது நடக்காத காரியம் எனவும் கேப்டன்ஷிப் என்பது பிறப்பிலேயே இயற்கையிலேயே ஒருவரிடம் இருந்தால் மட்டுமே ஒரு அணியை வழிநடத்தி உண்மையான வெற்றியை பெற முடியும் என நியாயமான கருத்தை கூறியுள்ளார்.

சொதப்பல் ராகுல் :
அவர் கூறுவது போல தென்ஆப்ரிக்க தொடரில் கேஎல் ராகுல் முதல் முறையாக இந்தியாவிற்கு கேப்டனாக செயல்பட்டார். ஆனால் ஒரு ரசிகருக்கு தெரிந்த அடிப்படை முடிவைக்கூட அவர் எடுக்காததால் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. குறிப்பாக வெங்கடேஷ் ஐயரை அவர் உபயோகித்த விதம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுபற்றி மனோஜ் திவாரி மேலும் கூறுகையில்,

- Advertisement -

rahul 2

“நம்மிடம் இருந்த தரமான வீரர்களை வைத்துக்கொண்டு 3 – 0 என மோசமான தோல்வியை பெற்றிருக்க கூடாது. ஒரு சில தவறான முடிவுகள் நமக்கு தோல்வியை கொடுத்தது. இதற்காக ராகுலை நான் குறை கூற விரும்பவில்லை ஆனால் தேர்வுக் குழுவினர் மீது ஏமாற்றமளிக்கிறது. ஏனெனில் அவர்கள் கேப்டனாக தகுதியானவர் யார் என கண்டறியாமல் ஒருவரை கேப்டனாக வளர்க்க நினைக்கிறார்கள். அதனால்தான் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்படும் அளவுக்கு தேர்வுக்குழுவினர் ராகுலிடம் கேப்டனாக எதை கண்டார்கள் என கேட்கிறேன்” என கூறியுள்ளார்.

மேலும் கேப்டனாக ரோகித் ஷர்மா செயல்படுவது பற்றி எந்தவித கேள்வியும் இல்லை. ஏனெனில் அவர் இயற்கையாகவே கேப்டன்ஷிப் செய்யும் தலைமை பண்பு கொண்டவர். அவரின் முடிவெடுக்கும் தன்மை மற்றும் எவ்வித சூழ்நிலையிலும் பொறுமையாக இருக்கும் தன்மை ஆகியவற்றை ஐபிஎல் தொடரில் பார்த்தோம். அப்படிப்பட்ட ரோகித் சர்மா அணியில் இருக்கும் போது வேறு ஒருவரை கேப்டனாக வளர்க்கிறேன் என தேர்வு குழுவினர் கூறக்கூடாது என மனோஜ் திவாரி கண்டிப்புடன் கூறி உள்ளார்.

இதையும் படிங்க : அடுத்த ஏபிடி வந்தாச்சு! பிரமிக்கவைத்த இளம்வீரர். RCB க்கு விளையாட அழைக்கும் ரசிகர்கள் – யார் அவர்?

இதற்கு முன் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக கேஎல் ராகுல் 2 சீசன்களில் கேப்டன்ஷிப் செய்தார். ஆனால் ஒருமுறை கூட அந்த அணியை அவரால் பிளே ஆப் சுற்றுக்கு கூட அழைத்து செல்ல முடியவில்லை. அப்படிப்பட்ட கேப்டன்ஷிப் பற்றி அனுபவமில்லாத ராகுலுக்கு திடீரென கேப்டன் பதவி கொடுக்க நினைப்பது தவறான ஒன்றாகும் என மனோஜ் திவாரி கூறியுள்ளார்.

Advertisement