ரிஷப் பண்ட் எதும் பண்ணல. தப்பு பண்ணது எல்லாம் பவுலர்ஸ் தான் – வம்பிழுத்து வாங்கி கட்டிக்கொண்ட முன்னாள் பாக் வீரர்

Mohammad-Asif-and-Rishabh-Pant
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணியானது இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 98 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால் எவ்வாறு அந்த சரிவிலிருந்து மீண்டு வரப்போகிறது என்று ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது மட்டுமின்றி இரண்டு பேருமே தங்கள் பங்களிப்பாக சிறப்பான சதத்தை பதிவு செய்தனர்.

Rishabh Pant Ind vs ENg Ravindra Jadeja

- Advertisement -

அதேபோன்று இறுதி நேரத்தில் அணியின் கேப்டன் பும்ரா அதிரடியாக விளையாடி 31 ரன்கள் குவித்தார். இப்படி இந்திய வீரர்களின் சிறப்பான பங்களிப்பினால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்கள் என்கிற நல்ல ரன் குவிப்பை வழங்கியது. அதனை தொடர்ந்து தற்போது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இங்கிலாந்து அணியும் துவக்கத்திலிருந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க 2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறிய போது தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் மீண்டும் ஆட்டத்தை நமது பக்கம் கொண்டு வந்த ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 20 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 146 ரன்கள் எடுத்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அடித்த இந்த ஒரு சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரராக மாறி இருந்ததையும் நாம் பார்த்தோம். அதோடு ரிஷப் பண்டின் இந்த சவாலான ஆட்டம் குறித்து பல்வேறு தரப்பிலும் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் வேளையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஆசிப் ரிஷப் ஃபண்ட் குறித்து அளித்த ஒரு பேட்டி தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

Rishabh-Pant

அப்படி முகமது ஆசிப் என்ன சொன்னார் என்பதை இந்த பதிவில் காணலாம். அதன்படி ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிரான விளையாடிய விதம் குறித்து பேசிய முகமது ஆசிப் கூறுகையில் : இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அவர் இப்படி எளிதாக சதம் அடிக்க காரணம் இங்கிலாந்து பவுலர்களின் தவறுதான். பவுலர்கள் செய்த தவறின் காரணமாகவே அவரால் இந்த சதத்தினை எளிதாக அடிக்க முடிந்தது.

- Advertisement -

ரிஷப் பண்டின் இடது கை அவரது பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கவே இல்லை. ஆனாலும் அதனை தெரிந்து கொண்டும் இங்கிலாந்து வீரர்கள் பொறுப்பெற்ற பந்துவீச்சினை வெளிப்படுத்தி உள்ளனர். மற்றபடி பேட்டிங்கில் பெரிய அளவு ரிஷப் பண்டிடம் டெக்னிக் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இந்த போட்டியில் அவர் அடித்த சதத்திற்கு காரணம் முற்றிலும் பவுலர்கள் செய்த தவறுதான். சரியான இடத்தை தேர்வு செய்து சரியான வேகத்தில் பந்து வீசினால் அவரது விக்கெட்டை எளிதில் பறிக்கலாம் என்றும் முகமது ஆசிப் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : பயிற்சி போட்டியாவே இருந்தாலும் நீங்க எனக்கு கொடுத்த இந்த பதவி பெருமையா இருக்கு – நன்றி சொல்லி நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்

பலரும் பாராட்டும் வகையில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட்டை பாராட்டவில்லை என்றாலும் இப்படி பொதுவெளியில் முற்றிலும் புறம்பான கருத்துக்களை கூறிய முகமது ஆசிப்பை விமர்சித்து இந்திய ரசிகர்களும் அவருக்கு சமூகவலைதளம் வாயிலாக தற்போது தக்க பதிலடி கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement