பயிற்சி போட்டியாவே இருந்தாலும் நீங்க எனக்கு கொடுத்த இந்த பதவி பெருமையா இருக்கு – நன்றி சொல்லி நெகிழ்ந்த தினேஷ் கார்த்திக்

Dinesh-Karthik
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதன்மை வீரர்களைக் கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த ஒரு நாள் கழித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது. அதேபோன்று டி20 தொடர் முடிந்த சில நாட்களில் ஒருநாள் தொடரும் துவங்க உள்ளது. இப்படி அடுத்தடுத்த போட்டிகள் இந்திய அணிக்கு இருப்பதினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது.

பின்னர் 2 ஆவது மற்றும் 3 ஆவது ஆட்டத்தில் சீனியர் வீரர்கள் அணியுடன் இணைகின்றனர். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள இந்த முதலாவது டி20 போட்டியில் பங்கேற்க அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து வந்த பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது கவுண்டி அணியுடன் இரண்டு டி20 போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்திலும் இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்த பயிற்சி போட்டியில் இந்திய அணியை ஹார்டிக் பாண்டியா வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹார்திக் பாண்டியாவிற்கு இந்த பயிற்சி போட்டிகளின் போது ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் கேப்டனாக பயிற்சி போட்டியில் விளையாடுவார் என அறிவிப்பு வெளியானது. அதன்படி நடைபெற்று முடிந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனை தொடர்ந்து இரண்டாவது பயிற்சி போட்டியிலும் இந்திய அணி தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் தான் விளையாட உள்ளது. இந்நிலையில் பயிற்சி போட்டியில் கேப்டனாக செயல்பட்டது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள தினேஷ் கார்த்திக் அணி நிர்வாகத்திற்கும் நன்றியும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் : இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக நான் விளையாடி வருகிறேன். ஆனால் இந்திய அணியை தலைமை தாங்குவது இதுதான் முதல் முறை. என்னதான் இது பயிற்சி போட்டியாக இருந்தாலும் கூட இந்த ஒரு பதவி எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.

இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக போட்டிகளில் சேர்ந்து விளையாடிய டாப் 5 ஜோடி வீரர்களின் பட்டியல்

என் மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. இந்திய அணியில் ஒரு வீரராக விளையாடுவது மிகப் பெருமையாக உள்ளது என தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக் டி20 உலககோப்பை தொடரில் தேர்வு செய்யப்படுவாரா? என்று அனைவரும் எதிர்பார்த்து வரும் வேளையில் அவருக்கு கிடைத்துள்ள இந்த கேப்டன் பதவி கிட்டத்தட்ட அவரது உலகக்கோப்பை இடத்தினை உறுதி செய்துள்ளது என்றே கூறலாம்.

Advertisement