- Advertisement -
ஐ.பி.எல்

2019இல் ஆர்சிபி விராட் கோலியை நீக்கிட்டு.. அவரை கேப்டனாக போட பேசுனாங்க.. மொய்ன் அலி பகிர்ந்த பின்னணி

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று சாதனை படைத்தது. அதனால் விராட் கோலி ஒரு வழியாக போராடி 17 வருடங்கள் காத்திருந்து ஐபிஎல் கோப்பையை வென்றது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. முன்னதாக 2008 முதல் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடும் ஒரே வீரர் என்ற சாதனையுடன் விராட் கோலி விளையாடி வருகிறார்.

2013ஆம் ஆண்டு கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர் 2016 சீசனில் 973 ரன்கள் குவித்து வெறித்தனமாக விளையாடி பெங்களூரு அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். இருப்பினும் இறுதிப்போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோற்ற பெங்களூரு அணி கோப்பையை கோட்டை விட்டது. அதற்கிடையே இந்திய அணியின் கேப்டனாகவும் விராட் கோலி ஐசிசி கோப்பையை வெல்லத் தவறினார்.

- Advertisement -

2019 ஐபிஎல் பின்னணி:

அதனால் விராட் கோலி கேப்டனாக இருக்கும் வரை ஆர்சிபி கோப்பையை வெல்லாது என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக 2021இல் இந்திய அணியின் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த கையோடு ஆர்சிபி கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலகினார். அதன் பின் டு பிளேசிஸ் தலைமையில் விளையாடியும் தோல்விகளைச் சந்தித்த பெங்களூரு அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் கோப்பையை வென்றது.

இந்நிலையில் 2019 ஐபிஎல் தொடருடன் விராட் கோலியை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்க ஆர்சிபி அணியில் பேச்சுவார்த்தை நடந்ததாக மொய்ன் அலி தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த சமயத்தில் பயிற்சியாளராக இருந்த கேரி கிர்ஸ்டன் தொடர் தோல்விகளை நிறுத்துவதற்காக விராட் கோலியை நீக்கி விட்டு பார்த்தீவ் பட்டேலை கேப்டன நியமிக்க பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அந்த காலகட்டங்களில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மொய்ன் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பகிர்ந்த மொய்ன் அலி:

“ஆம் அந்த சமயத்தில் பார்த்தீவ் கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகள் இருந்தன. கேரி கிர்ஸ்டன் பயிற்சியாளராக இருந்த கடைசி வருடத்திலும் அதற்கடுத்த முதல் வருடத்திலும் பார்த்தீவ் கேப்டனாக வருவதற்கான வரிசையில் இருந்தார். அவரிடம் சிறப்பான கிரிக்கெட்டை பற்றிய மூளை இருக்கிறது”

இதையும் படிங்க: எங்களுக்கு சொல்ல நீங்க யார்? ஓவல் பிட்ச் தயாரிப்பாளருடன் மோதிய கம்பீர் மேலே புகார்? நடந்தது என்ன?

“அதுவே அந்த சமயத்தில் பேச்சுவார்த்தையாக இருந்தது. இருப்பினும் அதன் பின் என்ன நடந்தது அல்லது ஏன் அந்த முடிவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஆர்சிபி கேப்டனாக நியமிக்க தீவிரமாக கருதப்பட்டார்” என்று கூறினார். ஆச்சரியப்படும் வகையில் பெங்களூரு அணியிலிருந்து 2019இல் பார்த்தீவ் பட்டேல், 2020இல் கேரி கிர்ஸ்டன் கழற்றி விடப்பட்டனர். அதே போல மொய்ன் அலியும் சிஎஸ்கே அணிக்காக விளையாடச் சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -