இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து தப்பிய இந்தியா டிரா செய்தது. இருப்பினும் 2 – 1* என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரில் முன்னிலையில் இருக்கிறது. அதனால் கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய இந்திய அணி தயாராகி வருகிறது.
அதற்காக கடைசிப் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு சென்றுள்ள இந்திய அணியினர் அங்கே பயிற்சிகளை துவங்கியுள்ளனர். தற்போது அங்கே மைதான பராமரிப்பாளருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே பயிற்சியாளர் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஓவல் மைதானத்தின் பிட்ச் பற்றி அதன் தயாரிப்பாளர் லீ போர்ட்டிஸ் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் பேசியுள்ளார்கள்.
மைதான தயாரிப்பாளருடன் மோதல்:
அப்போது பிட்ச் பற்றி ஏதோ ஒரு விஷயத்தை பேசிக் கொண்டிருக்கும் போது அவர்களுடைய முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த கம்பீர். “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள். எங்களில் ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூட உங்களால் சொல்ல முடியாது. நீங்கள் வெறும் மைதான தயாரிப்பாளர் மட்டுமே. எனவே தயாரிப்பாளர், தயாரிப்பாளர் போல இருங்கள்” என்று அவரிடம் கம்பீர் சொன்னதாக செய்தி தெரிவிக்கின்றன.
அதனால் அதிருப்தியடைந்த மைதானத் தயாரிப்பாளரை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் பேசிக்கொண்டே தூரமாக அழைத்துச் சென்றார். ஆனால் அப்போதும் நிற்காத கம்பீர் அவருடைய அருகே வந்து கையை நீட்டி கோபமாக பேசினார். குறிப்பாக கௌதம் கம்பீர் கோபமாக பேசியதை புகார் செய்யப் போவதாக லீ போர்ட்டிஸ் சொன்னதாக தெரிகிறது.
முடிஞ்சத பாருங்க:
அதற்கும் “நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்யுங்கள். ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியாது” என கம்பீர் அவருக்கு பதிலடி கொடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது சம்பந்தமான வீடியோ காட்சிகளும் பிடிஐ இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்படி கௌதம் கம்பீர் கோபமடையும் அளவுக்கு அந்த மைதானத் தயாரிப்பாளர் என்ன சொன்னார் என்று என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? கோச் கம்பீர் – அளித்த பதில்
இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய அணி சார்பில் இன்று மாலை யாராவது வந்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 4வது போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கை கொடுத்ததை இந்தியா ஏற்காததால் நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதற்கிடையே மைதானப் பராமரிப்பாளர் கௌதம் கம்பீர் மோதியுள்ளது மற்றும் ஒரு பரபரப்பை உண்டாக்கி உள்ளது.



