இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவாரா? மாட்டாரா? என்பது தான் கடந்த சில நாட்களாகவே அதிகளவில் விவாதிக்கப்படும் விடயமாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே பணிச்சுமை காரணமாக இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது.
5 ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா? : கம்பீர் அளித்த பதில்
அந்த வகையில் இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த நிலையில் ஏற்கனவே பும்ரா மூன்று போட்டிகளில் விளையாடி விட்டதால் கடைசி போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. ஆனாலும் கடைசி போட்டியில் பும்ரா இடம் பெற்றால் தான் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்பதனால் அவர் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியானது வரும் ஜூலை 31-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்க இருக்கும் வேளையில் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) கணக்கில் சமன் செய்ய முடியும். இதன் காரணமாக கட்டாயம் பும்ரா விளையாட வேண்டும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் இன்றளவும் அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? மாட்டாரா? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீர் கூறுகையில் :
ஜஸ்ப்ரீத் பும்ரா அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை. யார் விளையாடினாலும் அணியின் வெற்றிக்காக தங்களது முழு பங்களிப்பை வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். எங்கள் அணியில் தற்போதுள்ள அனைத்து வீரர்களும் நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். யாருக்கும் காயம் என்கிற பிரச்சனை ஏதும் கிடையாது.
இதையும் படிங்க : கடைசி வாரம் இது.. நம்ம நாட்டுக்கு பெருமை தேடித்தர இதை பண்ணுங்க.. வீரர்களிடையே பேசிய – கோச் கம்பீர்
தற்போது வரை கடைசி டெஸ்ட் போட்டியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என்பது குறித்து நாங்கள் எதுவும் விவாதிக்கவில்லை. ஆனால் விரைவில் அது குறித்து பேசி நிச்சயம் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம் என கவுதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.



