- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரிஸ்க் எடுத்து மொத்தமா இழந்துடாதீங்க.. கில் – பும்ராவில் அடுத்த கேப்டன் யார் என்பது பற்றி மொய்ன் அலி தேர்வு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நம்பிக்கையின் நட்சத்திரம் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களுடைய இடத்தில் விளையாடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக ஒட்டுமொத்த இந்திய அணியையும் அடுத்ததாக தலைமை தாங்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அது போன்ற சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும். ஏனெனில் உலகின் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் அவரது தலைமையில் கடந்த ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் இந்தியா பிரம்மாண்ட வெற்றி பெற்று சாதனை படைத்தது. இருப்பினும் வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அவர் அவ்வப்போது காயத்தைச் சந்தித்து வருகிறார்.

- Advertisement -

பும்ரா – கில் போட்டி:

எனவே அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புதிய கேப்டனாக நியமனம் செய்யப் பரிந்துரைச் செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமிப்பது அவருடைய பணிச்சுமையை அதிகரிக்கும் என்று இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி கூறியுள்ளார். அவ்வாறு செய்தால் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை சந்தித்து இங்கிலாந்து தொடரில் முழுமையாக விளையாட முடியாத நிலைமை ஏற்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிசிசிஐ ஜஸ்ப்ரித் பும்ராவை கேப்டனாக நியமனம் செய்ய விரும்புவார்கள். ஏனெனில் அவர் நல்ல கேப்டன்”

- Advertisement -

மொய்ன் அலி தேர்வு:

“இதற்கு முன் சிறப்பாக விளையாடியுள்ளார். ஆனால் அவருடைய காயங்கள் பற்றிய ரெக்கார்ட் இருக்கிறது. அதன் காரணமாக அவரால் மொத்த தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்படலாம். அது போன்ற சூழ்நிலையில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓரளவு அசத்தியுள்ள சுப்மன் கில்லிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுக்கலாம். ஐபிஎல் தொடரில் அவர் குஜராத் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்”

இதையும் படிங்க: அதை கரணம் காட்டி சுதர்சனை கலக்காதீங்க.. கோலியின் இடத்தில் கருண் நாயர் தான் ஆடனும்.. கும்ப்ளே பேட்டி

“எனவே இந்தியாவுக்கு அவர் நல்ல கேப்டனாக கிடைப்பார். ஆம் அவரிடம் அனுபவம் இல்லை. ஆனால் கிரிக்கெட்டைப் பற்றிய நல்ல மூளையைக் கொண்டுள்ள அவர் நல்ல கேப்டனாக வளர்வார். அதே சமயம் இங்கிலாந்து மண்ணில் விளையாடுவது அவருக்கு பெரிய சவாலாக இருக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் இங்கிலாந்து மண்ணில் விராட், ரோஹித் போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் இந்தியா களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -