- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பெரிய பெயரை வெச்சுகிட்டு சுயநலமா இல்லாம நாட்டுக்காக அவங்களுக்காக ரிட்டையராகுங்க.. மொய்ன் அலி

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக செயல்பட்டு வருகிறார்கள். கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளில் பங்காற்றிய அவர்கள் ஜாம்பவான்களாக போற்றப்படுகிறார்கள். இருப்பினும் சராசரியாக 37 வயதை தாண்டி விட்ட அவர்கள் சமீப காலங்களில் தடுமாறி வருகின்றனர்.

குறிப்பாக கடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களில் அவர்கள் சுமாராக விளையாடியது இந்தியாவின் மோசமான தோல்விக்கு காரணமானது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. இருப்பினும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையை இந்தியா வெல்வதற்கு அவர்கள் முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

சுயநலம் வேண்டாம்:

அதனால் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொடர்ந்து இந்தியாவுக்காக விளையாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் அவர்களைப் போன்ற வீரர்கள் பெரிய பெயர்கள் வைத்திருக்கிறோம் என்ற காரணத்திற்காக சுயநலமாக இல்லாமல் வருங்கால வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மொய்ன் அலி மறைமுகமாக தெரிவித்துள்ளார். ஏனெனில் நாட்டுக்காக விளையாட நிறைய இளம் வீரர்கள் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி மொய்ன் அலி பேசியது பின்வருமாறு. “உங்களுக்குப் பெரிய பெயர் இருக்கிறது அல்லது உங்களுக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதற்காக நீங்கள் உங்களுடைய ஓய்வை பிடித்து வைக்கக்கூடாது. அது உங்களுடைய தனிப்பட்ட இலக்குக்காகவும் இருக்கக் கூடாது. சுயநலமாக பிடிப்பதற்காக மட்டும் ஓய்வைப் பிடித்துக் கொள்ளாதீர்கள்”

- Advertisement -

மொய்ன் அட்வைஸ்:

“இன்னும் கொஞ்சம் எதார்த்தமாக யோசித்துப் பார்த்து நமது ஓய்வை பிடித்து வைப்பது மதிப்புக்குரியதா? அணிக்கு இன்னும் என்னால் அதிகம் கொடுக்க முடியுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வருங்காலத்தை நோக்கி அணி புதிய திசையில் செல்ல விரும்பினால் நீங்கள் அதை அனுமதிக்க வேண்டும். ஏனெனில் கொஞ்சம் வயதாகும் போது தற்சமயத்தில் உள்ள இளம் வீரர்கள் உங்களை விட சிறப்பாக விளையாடுவார்கள்”

இதையும் படிங்க: ஸ்ரேயாஸ் மாதிரி யார் திறமையையும் மறைக்கும் ஈகோ கிடையாது.. சூழ்நிலையே முக்கியம்.. விராட் கோலி பேட்டி

“அதற்காக அவர்கள் உங்களைவிட சிறந்தவர்கள் என்று கிடையாது. அவர்கள் உங்களை விட நன்றாக விளையாடுகிறார்கள். அதனால் உங்களுக்கு நீங்களே நிதர்சனத்துடன் உண்மையாக இருக்க வேண்டும். ஐபிஎல் போன்ற தனியார் தொடர்களில் நீங்கள் எவ்வளவு வயதில் விளையாடினாலும் பரவாயில்லை. அது டி20. ஆனால் நாட்டுக்காக விளையாடும் போது ஒருநாள் அல்லது டெஸ்ட் கிரிக்கெட்டில் சுய பிரதிபலிப்பு கடினமாக இருக்க வேண்டும். இங்கிலாந்து தனியார் அணியாக இருந்திருந்தால் நான் தொடர்ந்து விளையாடியிருப்பேன். ஆனால் இங்கிலாந்து ஒரு நாட்டை பிரதிபலிக்கும் சர்வதேச அணி என்பதால் மற்ற வீரர்களுக்கு வழி விட்டு ஓய்வு பெற்றேன்” என்று கூறினார்.

- Advertisement -