இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 27000 ரன்களையும் 82 சதங்களையும் அடித்துள்ள அவர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அப்படிப்பட்ட விராட் கோலி அவ்வப்போது சுயநலமாக விளையாடுவதாக விமர்சனங்களை சந்திப்பது வழக்கமாகும்.
அதாவது பொதுவாகவே விராட் கோலி ஆரம்பத்தில் கொஞ்சம் நிதானமாக விளையாடி நேரம் செல்ல செல்ல அதிரடியாக ரன்கள் குவித்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்கக்கூடிய ஸ்டைலைக் கொண்டவர். அந்த அணுகுமுறையைப் பின்பற்றும் போது சில நேரங்களில் அவர் பெரிய ரன்களை குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில் வரும். அப்போது பெரிய ரன்கள் குவிப்பதற்காக விராட் கோலி சுயநலமாக விளையாடுகிறார் என்ற விமர்சனங்கள் வருகின்றன.
ஈகோ கிடையாது:
இந்நிலையில் பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்க வேண்டும் என்பதற்காக தாம் விளையாடுவதில்லை என்று விராட் கோலி கூறியுள்ளார். மாறாக சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடும் தாம் எதிர்ப்புறம் இருக்கும் பேட்ஸ்மேன்களின் திறமையை மறைக்கும் வகையிலும் செயல்படுவதில்லை என்று கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக கடந்த 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் ஸ்ரேயாஸ் நல்ல ஃபார்மில் அதிரடியாக விளையாடியதாக அவர் கூறியுள்ளார்.
அப்போது அவர் அதிரடியாக விளையாடுவதற்காக தாம் மறுபடியும் நங்கூரமாக விளையாடியதாக கூறும் விராட் கோலி இது பற்றி பேசுவது பின்வருமாறு. “சமீப காலங்களில் எப்படி விஷயங்கள் சென்றது என்றுப் பார்த்தால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியின் ஒரு போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடினார். அது எப்போதும் ஈகோவை பற்றியதாக இருந்ததில்லை”
சூழ்நிலையே முக்கியம்:
“அந்த சமயத்தில் நல்ல ரிதத்தில் இருந்திருந்தால் இயற்கையாகவே நான் அதிரடியாக விளையாடுவதற்கான துவக்கத்தை எடுத்திருப்பேன். ஒருவேளை மற்றொருவர் அந்த முன்னணியை எடுப்பதற்கு தேவையான சரியான இடத்தில் இருந்தால் அவர்கள் அதை செய்யலாம். அது ஒருபோதும் யாரையும் மறைக்க முயற்சிப்பதோ அல்லது திடீரென என்னிடம் திறமை இல்லை என்று உணர்வதோ கிடையாது”
இதையும் படிங்க: 18 வருஷத்துல இதுவே முதல்முறை.. சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை – விவரம் இதோ
“மாறாக அவை அனைத்தும் போட்டியின் சூழ்நிலையைப் புரிந்து விளையாடுவதைப் பற்றியதாகும். அதை நான் பெருமையுடன் செய்ய எடுத்துக் கொள்கிறேன். சூழ்நிலை என்ன கேட்கிறதோ அதற்குத் தகுந்தார் போல் நான் விளையாட விரும்புகிறேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விராட் கோலி பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



