18 வருஷத்துல இதுவே முதல்முறை.. சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை – விவரம் இதோ

CSK
- Advertisement -

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் ஆரம்பத்திலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி அட்டகாசமாக தொடரை துவங்கிய சிஎஸ்கே அணி அடுத்தடுத்து தற்போது நான்கு தோல்விகளை பெற்றுள்ளது.

மோசமான சாதனையை நிகழ்த்திய சி.எஸ்.கே :

இப்படி இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 5 போட்டிகளில் நான்கு தோல்விகளை பெற்றுள்ள சென்னை அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கும் வேளையில் மீதம் உள்ள 9 போட்டிகளில் கிட்டத்தட்ட 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றை எட்டும் என்பதனால் இந்த ஆண்டு சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

- Advertisement -

இந்த தொடரின் முதல் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக எளிதில் வெற்றி பெற்ற சென்னை அணியானது அதற்கு அடுத்ததாக பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்துள்ளது.

அதிலும் குறிப்பாக 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் ஒரு மோசமான சாதனையையும் சிஎஸ்கே அணி நேற்றைய போட்டியின் மூலம் நிகழ்த்தியுள்ளது. அதாவது கடைசியாக நடைபெற்ற பெங்களூரு, ராஜஸ்தான், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய நான்கு அணிகளுக்கு எதிராகவும் இரண்டாவதாக பேட்டிங் செய்து சென்னை அணி சேசிங்கில் இப்படி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் இதுவரை எந்த சீசனிலும் தோற்றதே கிடையாது.

- Advertisement -

ஆனால் இம்முறை எதிரணிகள் 180 ரன்களை தாண்டினாலே அந்த இலக்கினை எட்டவே சிரமப்பட்டு ஆட்டமிழந்து வருகிறது. மற்ற அணிகள் எல்லாம் பவர்பிளேவில் அதிரடியாக விளையாடி பெரிய ரன் குவிப்பை நோக்கி செல்லும் வேளையில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்யும்போது மந்தமாக ஸ்கோரை துவங்குவது மட்டுமின்றி சேசிங்கிலும் 180 ரன்கள் கடக்கவே மிகவும் சிரமப்படுவது இந்த ஆண்டு சென்னை அணிக்கு பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

இதையும் படிங்க : மெகா ஏலத்தின் போதே ருதுராஜ் அந்த முடிவை எடுத்துட்டாரு.. அதான் 3 ஆம் இடத்தில் விளையாடுறாரு – மைக்கல் ஹஸி

மிடில் ஆர்டரில் பவர் ஹிட்டர்கள் இல்லாததால் தான் சென்னை அணி இப்படி சேஸிங்கில் மோசமாக தோற்று வருவதாகவும் ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் குறிப்பிடுவது போலவே சரியான பவர் ஹிட்டர்கள் இல்லாமல் கடந்த 4 போட்டிகளாகவே சி.எஸ்.கே சேஸிங்கை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement