சென்னை அணி விளையாட இருக்கும் முதல் போட்டியை தவறவிடும் நட்சத்திர வீரர் – அடப்பாவமே

CSK-2
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்னும் ஒருசில தினங்களில் பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த ஆண்டிற்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் வரும் சனிக்கிழமை மோத விருக்கின்றன. இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போதைய ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

CSKvsKKR

- Advertisement -

ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே இந்தியாவில் நடைபெற உள்ளதால் தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு செம எண்டர்டெய்ன்மென்ட் காத்திருக்கிறது. இதன்காரணமாகவே இந்த முதல் போட்டியிலேயே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. இந்த ஐபிஎல் தொடருக்கு முதல் அணியாக சூரத் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னை அணிக்கு ஒரு சில வீரர்கள் காயத்தில் இருப்பது கவலை அளித்தாலும் மொயின் அலி இன்னும் இந்தியா வந்து சேராதது பெரிய வருத்தத்தை அளித்துள்ளது.

இங்கிலாந்து அணியை சேர்ந்த முன்னணி ஆல்ரவுண்டரான மொயின் அலி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக 15 போட்டிகளில் விளையாடி 357 ரன்களை குவித்தார். அதுமட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்படும் அவர் சென்னை அணியின் முக்கிய வீரராக இந்த ஆண்டு தக்க வைக்கப்பட்டுள்ளார்.

moeen ali 2

அப்படியிருக்கையில் இதுவரை இந்தியா வருவதற்கு விசா கிடைக்காமல் தவித்து வரும் மொயின் அலி இன்று புதன்கிழமை மும்பை வந்து சேர்வார் என்று தெரிகிறது. அப்படி என்று அவர் மும்பை வந்தாலும் அவர் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியை தவறு விடுவார் என்றும் உறுதியாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் ஐபிஎல் தொடருக்கான அணியில் இணையும் முன்னர் வெளிநாட்டிலிருந்து வரும் வீரர்களும் சரி, வெளி மாநிலத்தில் இருந்து வரும் வீரர்களும் சரி கட்டாயம் மூன்று நாட்கள் குவாரன்டைன் இருக்க வேண்டும். அந்த வகையில் பார்க்கும் போது அவர் சனிக்கிழமை வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் வேளையில் கொல்கத்தா அணிக்கு எதிரான முதல் போட்டியை நிச்சயம் மொயின் அலி தவற விடுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒன்னுமே இல்லாத டீம வெச்சு ஐபிஎல் கோப்பையை வென்று காட்டினார் – ஷேன் வார்னேவை பாராட்டும் நட்சத்திர வீரர்

மொயின் அலி முதல் போட்டியில் விளையாட முடியாமல் போனது சென்னை அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதனைத் தொடர்ந்து வரும் போட்டிகளில் அவர் நிச்சயம் இடம் பெறுவார். அதேபோன்று இந்த ஆண்டு சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அறிமுக வீரராக டேவான் கான்வே ஆகியோர் களமிறங்குவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement