ஒன்னுமே இல்லாத டீம வெச்சு ஐபிஎல் கோப்பையை வென்று காட்டினார் – ஷேன் வார்னேவை பாராட்டும் நட்சத்திர வீரர்

Warne and Watson IPL 2008 RR
- Advertisement -

சமீபத்தில் மாரடைப்பால் மறைந்த ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் உடல் ஆஸ்திரேலிய அரசு மரியாதைப்படி மெல்போர்ன் நகரில் தகனம் செய்யப்பட்டது. வெறும் 52 வயது மட்டுமே நிரம்பியிருந்த அவர் திடீரென இந்த உலகை விட்டுப் பிரிந்தது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் உட்பட அனைவரையும் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

- Advertisement -

சுழல் பந்துவீச்சின் தலைமகனாக கருதப்படும் அவர் தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா உட்பட உலகின் பல தரமான பேட்ஸ்மேங்களையும் தனது மேஜிக் நிறைந்த சுழல் பந்து வீச்சால் திணறடித்த பெருமைக்குரியவர். குறிப்பாக லெக் ஸ்பின் எனும் கலையின் கலைஞனாக போற்றப்படும் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 1000 விக்கெட்களுக்கு மேல் எடுத்த ஒரு அற்புதமான ஜாம்பவான் ஆவார்.

முதல் ஐபிஎல் கேப்டன்:
சர்வதேச கிரிக்கெட்டில் தன்னை ராஜாவாக நிரூபித்த அவர் ஐபிஎல் தொடரிலும் அதுவும் ஒரு மகத்தான கேப்டன் என நிரூபணம் செய்தவர். ஆம் கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் இன்று உலக அளவில் பிரசித்தி பெற்று அதிக ரசிகர்களை கொண்ட உலகப் புகழ்பெற்ற நம்பர் ஒன் டி-20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Shane Warne Rajasthan Royals RR IPL 2008

அப்படிப்பட்ட இந்த தொடரில் ரோகித் சர்மா, எம்எஸ் தோனி போன்ற கேப்டன்கள் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டன்களாக சாதனை படைத்துள்ளார்கள். இருப்பினும் 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் சாம்பியன் பட்டத்தை வென்று காட்டிய ஷேன் வார்னே ஐபிஎல் கோப்பையை வென்ற முதல் கேப்டன் என்ற காலத்தால் அழிக்கமுடியாத சரித்திரத்தை படைத்துள்ளார். சொல்லப்போனால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை கோப்பையை வென்ற கேப்டன்கள் அனைவரும் ஒரு பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அப்படிப்பட்ட நிலையில் ஒரு பந்து வீச்சாளராக அதுவும் வெளிநாட்டு சுழல் பந்து வீச்சாளராக இந்திய மண்ணில் நடந்த முதல் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது உண்மையாகவே அவரின் திறமைக்கு எடுத்துக்காட்டாகும்.

- Advertisement -

சாதித்து காட்டிய ஷேன் வார்னே:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த வருடம் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவின் நட்சத்திர முன்னாள் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது டெல்லி அணியுடன் இணைந்துள்ள அவர் சமீபத்தில் மறைந்த தனது நண்பர் மற்றும் ஜாம்பவான் ஷேன் வார்னேவை பற்றி மனம் திறந்துள்ளார்.

warne

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “முதல் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியதில் ஒரு சில அம்சங்கள் இன்னும் எனக்குள் நிற்கிறது. குறிப்பாக இதர அணிகளில் மிகப்பெரிய நட்சத்திர ஸ்டார் வீரர்கள் இருந்த நிலையில் அதுபோன்ற பெரிய நட்சத்திரங்கள் இல்லாத அணியாக ராஜஸ்தான் இருந்தது. இருப்பினும் அதற்கெல்லாம் அசராமல் ஒரு அணியாக குறுகிய காலகட்டத்திற்குள் ஒன்று சேர்ந்து வெற்றி பெற முடிந்தது. குறிப்பாக அணியில் எந்தெந்த வீரர்களிடம் என்னென்ன திறமை உள்ளது என்பதை பற்றி புரிந்துகொண்ட ஷேன் வார்னே அதற்கு ஏற்றார்போல் அணியை வழி நடத்தினார்.

- Advertisement -

என்னைப்பொறுத்தவரை ஒரு வீரரிடம் இருக்கும் திறமையை வைத்து சிறந்த ஒருவரை வெளிக்கொணரும் பண்பால் ஷேன் வார்னே ஒரு தலை சிறந்த கேப்டனாக இருந்தார். அவர் வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்கள் இந்த இடத்தில் இந்த வேலைக்கு பொருந்துவார்கள் என்பதன் மீது நம்பினார். அதன் காரணமாக தான் முதல் தொடரில் ராஜஸ்தான் சிறப்பாக செயல்பட்டது” என பாராட்டினார்.

Shane Warne Ravindra Jadeja IPL 2008 RR

மகத்தான ஷேன் வார்னே:
அவர் கூறுவது போல 2008-ஆம் ஆண்டு மும்பை, கொல்கத்தா போன்ற இதர அணிகளில் நிறைய ஸ்டார் வீரர்கள் நிறைந்திருந்தனர். ஆனால் ராஜஸ்தான் அணியில் ஷேன் வாட்சன் போன்ற ஒருசில ஸ்டார் வீரர்களைத் தவிர யூசுப் பதான், ரவீந்திர ஜடேஜா போன்ற அனுபவம் இல்லாத இளம் வீரர்கள் தான் நிறைந்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் அவர்களின் திறமையை அறிந்து அவர்களை எந்தெந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டு ராஜஸ்தான் அணியை சிறப்பாக வழிநடத்தி சாம்பியன் பட்டத்தை வென்ற ஷேன் வார்னே உண்மையாகவே ஒரு தரமான கேப்டன் என அவர் தலைமையில் அந்த தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய ஷேன் வாட்சன் உணர்ச்சி பொங்க பாராட்டினார்.

இதையும் படிங்க : விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்கள் அங்க மட்டும் தான் சாதிக்க முடியும்- விமர்சிக்கும் முன்னாள் பாக் வீரர்

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக ஷேன் வார்னே தலைமையில் ராஜஸ்தான் அணியில் விளையாடிய வாட்சன் அதன்பின் பெங்களூர் போன்ற அணிகளுக்காக விளையாடி கடைசியாக எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணியில் 2018 – 2020 வரை முக்கிய வீரராக விளையாடினார். அதன் பின் ஓய்வு பெற்றுள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் ஒரு பயிற்சியாளராக தனது புதிய பயணத்தை டெல்லி அணியுடன் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement