2017, 2021இல் நாம தோற்க அதான் காரணம், அதுல தைரியமா நின்னா பாகிஸ்தானை ஈஸியா ஜெயிக்கலாம் – இந்திய அணிக்கு கைப் அட்வைஸ்

Mohammed kaif
- Advertisement -

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளது. இலங்கையின் பல்லக்கேல் நகரில் நடைபெறும் இப்போட்டியில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தானை தரமான வீரர்களை கொண்ட இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. பொதுவாகவே வலது கை பேட்ஸ்மேன்களுக்கு இடது கை பவுலர்கள் சவாலை கொடுப்பார்கள் என்ற நிலைமையில் நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹுன் அப்ரிடி கேப்டன் ரோஹித் சர்மா, கில், ரோஹித் சர்மா போன்ற வலது கை பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி இந்தியாவை வீழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் பாகிஸ்தானுக்கு எதிரான மாபெரும் ஃபைனலில் புதிய பந்தை ஸ்விங் செய்து மிரட்டிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீருக்கு தாக்கு பிடிக்க முடியாத ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தது இந்தியாவுக்கு அவமான தோல்வியை பரிசளித்தது. அதே போல 2021 டி20 உலகக் கோப்பையில் ஷாஹின் அப்ரிடியின் துல்லியமான ஸ்விங் பந்துகளுக்கு தாக்கு பிடிக்காமல் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் முதல் 6 ஓவர்களுக்குள் பெவிலியன் திரும்பியது இந்தியாவுக்கு சரித்திர தோல்வியை பரிசாக கொடுத்தது.

- Advertisement -

தைரியமா நில்லுங்க:
அந்த வகையில் சமீப காலங்களில் முதல் 3 – 4 ஓவர்களில் புதிய ஸ்விங் பந்துகளுக்கு இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தாக்கு பிடிக்காததே பாகிஸ்தானிடம் தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாக முகமது கைப் தெரிவித்துள்ளார். எனவே இம்முறை முதல் 3 – 4 ஓவர்கள் வரை தைரியமாக நின்று விக்கெட்டுகள் விடாமல் இருந்தாலே எளிதாக பாகிஸ்தானை வீழ்த்தலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“முதல் சில ஓவர்களில் ரோஹித் சர்மா அல்லது கேஎல் ராகுல் போன்றவர்கள் அவுட்டானதே சமீப காலங்களில் இந்தியா அவர்களிடம் தோல்வியை சந்திக்க காரணமானது. எனவே இம்முறை நாம் 3 அல்லது 4வது ஓவர்கள் வரை விக்கெட் விடாமல் நங்கூரமாக நின்று விளையாடும் பட்சத்தில் இப்போட்டி தலைகீழாக மாறிவிடும் என்று நம்புகிறேன். ஏனெனில் அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்டிக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற ஃபினிஷிங் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கின்றனர். எனவே ஆரம்பக்கட்ட 3 ஓவர்களில் ஸ்விங்காகி வரும் பந்துகளை இந்தியா கவனமாக எதிர்கொள்ள வேண்டியது அவசியமாகும்”

- Advertisement -

இதையும் படிங்க: ஆசிய கோப்பை ஜெர்ஸியில் பாகிஸ்தானுக்கு எதிரா இந்தியா சதி பண்ணீட்டாங்க – சர்ச்சை கிளப்பிய முன்னாள் பாக் வீரர்கள்

“அதுவே நம்முடைய தொடக்க வீரர்கள் மற்றும் விராட் கோலிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சவாலாகும். ஏனெனில் நாள் முழுவதும் வலைப்பயிற்சியில் நீங்கள் விளையாடினாலும் முதன்மையான போட்டியில் ஷாஹின் அப்ரிடி வீசும் ஸ்விங் பந்துகள் உங்களுக்கு கிடைக்காது. பயிற்சியில் நீங்கள் எவ்வளவு தான் சோதனைகள் செய்தாலும் முதன்மையான போட்டியில் ஷாஹீன் அப்ரிடி வீசும் பந்துகளைப் போல் இருக்காது. எனவே நீங்கள் பயிற்சிகளை நம்பாமல் போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

Advertisement