முக்கிய வீரரின் பாதத்தை உடைத்த ஸ்டார்க்.. மடக்கி பிடித்த ஆஸி.. அற்புதமான வாய்ப்பை தவற விடும் வெ.இ?

- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற நிலையில் 2வது போட்டி ஜனவரி 25ஆம் தேதி புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து அசத்தியது.

ப்ரத்வெய்ட் 4, சந்தர்பால் 21, மெக்கன்சி 21, அதனேஷ் 8, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 6 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 64/5 என திணறிய வெஸ்ட் இண்டீஸ் 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிடில் ஆடரில் கேவன் ஹோட்ஜ் 71, ஜோஸ்வா டா சில்வா 79, கெவின் சின்க்ளைர் 50 ரன்கள் எடுத்து காப்பாற்றிய நிலையில், ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தவறும் சரித்திரம்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ஸ்டீவ் ஸ்மித் 6, லபுஸ்ஷேன் 3, கேமரூன் கிரீன் 8, டிராவிஸ் ஹெட் 0 என முக்கிய பேட்ஸ்மேன்களை ஒற்றை ரன்களில் அவுட்டாக்கி வெஸ்ட் இண்டீஸ் மிரட்டலை கொடுத்தது. அதனால் 24/4 என திண்டாடிய ஆஸ்திரேலியாவை துவக்க வீரர் உஸ்மான் கவாஜா 77, அலெக்ஸ் கேரி 65 ரன்கள் அடித்து ஓரளவுக்கு காப்பாற்றினர்.

அதே போல 10வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் பட் கமின்ஸ் 64* ரன்கள் எடுத்தார். அப்போது 22 ரன்கள் மட்டுமே பின்தங்கியிருந்த நிலையில் ஆஸ்திரேலியா 289/9 ரன்களில் தங்களுடைய இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4, கிமர் ரோச் 3 விக்கட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 193/9 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பியது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக கிர்க் மெக்கன்சி 41, அலிக் அதனேஷ் 35, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 33 ரன்கள் எடுத்தனர். மேலும் 11வதாக பேட்டிங் செய்த சமர் ஜோசப்பை 73வது ஓவரின் 3வது பந்தில் துல்லியமான யார்க்கர் பந்தால் மிட்சேல் ஸ்டார்க் அவுட்டாக்க முயற்சித்து பாதத்தை உடைத்தார் என்றே கூறலாம். ஏனெனில் அதை தவறாக கணித்த சமர் ஜோசப் சரியான அடி வாங்கி பாதம் உடைந்ததைப் போல் வேதனையை சந்தித்து பாதியிலேயே களத்திலிருந்து வெளியேறினார்.

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக நேத்தன் லயன் 3, ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையுடன் விளையாடும் ஆஸ்திரேலியா மூன்றாவது நாள் முடிவில் 60/2 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு வெற்றிக்கு 156 ரன்கள் தேவைப்படும் நிலையில் கவாஜா 10, லபுஸ்சேன் 5 ரன்களில் அவுட்டானாலும் ஸ்மித் 33*, கேமரூன் க்ரீன் 9* ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: 25 இன்னிங்ஸ்ல இது 12 ஆவது முறை.. ஸ்டோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் கபில் தேவை – சமன் செய்த அஷ்வின்

இந்த போட்டியில் இரண்டரை நாட்கள் சிறப்பாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் பேட்டிங்கில் சொதப்பிய அந்த அணி 300 ரன்கள் கூட இலக்காக நிர்ணயிக்காத்ததால் காபா மைதானத்தில் 32 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் அற்புதமான வாய்ப்பு தவற விட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement