WTC Final : ஃபைனலில் ரோஹித் சர்மாவை அவர் தெறிக்க விடப் போறாரு பாருங்க – ஆஸி பவுலரை பாராட்டிய டாம் மூடி

Tom Moody
- Advertisement -

இங்கிலாந்தின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 முதல் 11 வரை நடைபெறும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் தயாராகி வருகின்றன. டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த போட்டியில் வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளுக்கு இந்தியா முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. குறிப்பாக கடந்த ஃபைனலில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தாலும் 2019/20, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்திய தன்னம்பிக்கையுடன் இந்தியா களமிறங்குகிறது.

Rohit-and-Cummins

- Advertisement -

அதற்கு சவாலாக 5 உலகக் கோப்பைகளையும் டி20 உலக கோப்பையும் வென்று ஐசிசி தொடர்களில் வெற்றிகரமான அணியாக ஜொலித்து வரும் ஆஸ்திரேலியா இந்த கோப்பையை முதல் முயற்சிலேயே முத்தமிட்டு சமீப காலங்களில் இந்தியாவிடம் சந்தித்து வந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி, புஜாரா, நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் ஆகியோர் சவாலாக இருந்து இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கேப்டனாக முன்னின்று நல்ல ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் கொடுக்க வேண்டிய ரோகித் சர்மா என்ன செய்யப் போகிறார் என்ற கவலை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

ரோஹித் தடுமாறுவார்:
ஏனெனில் சமீப காலங்களாகவே ஹிட்மேன் என்ற பெயருக்கேற்றார் போல் அல்லாமல் தடுமாறும் அவர் 2023 ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு அதிக டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனை படைத்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி சுமாரான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மாவை இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர இடது கை அதிரடி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் தாக்கத்தை ஏற்படுத்த விடாமல் வீழ்த்துவார் என்று முன்னாள் வீரர் டாம் மூடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Mitchell Starc

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கப் போகிறது. ஏனெனில் ரோகித் சர்மா தன்னுடைய தரத்திற்கு ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்டு இந்த ஃபைனலில் விளையாட வந்துள்ளார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பாக டெஸ்ட் போட்டிகள் மிகவும் வித்தியாசமான களத்தை கொண்டது. ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நாம் அறிவோம்”

- Advertisement -

“இருப்பினும் இப்போட்டி நடைபெறும் இங்கிலாந்து மண்ணில் ஜூன் மாதத்தின் ஆரம்ப காலகட்டங்களில் நிலவும் சூழ்நிலைகள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குறிப்பாக கோடைகாலத்தின் இறுதியை விட இந்த துவக்க காலகட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இங்கிலாந்தில் இருக்கும் பிட்ச் சற்று அதிகமாகவே கை கொடுக்கும். அதன் காரணமாக இந்த போட்டியில் பேட்ஸ்மேன்களை விட பவுலர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்”

“அந்த வகையில் இந்த போட்டியில் ரோகித் சர்மாவுக்கு எதிராக மிட்சேல் ஸ்டார்க் வெல்வார் என்று நினைக்கிறேன்” என கூறினார். இருப்பினும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக நடந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் சுழலுக்கு சாதகமான நாக்பூரில் அனைத்து பேட்ஸ்மேன்களையும் மிஞ்சி கிளாஸ் பேட்டிங்கை வெளிப்படுத்திய ரோகித் சர்மா சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இதையும் படிங்க:WTC Final : ஃபைனலில் அசத்தி கப் ஜெயிச்சு கொடுங்க, உங்களுக்கு தொடர்ந்து சான்ஸ் தரோம் – சீனியர் வீரருக்கு டிராவிட் வாக்குறுதி

அத்துடன் இப்போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் கடைசியாக கடந்த 2021இல் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதமடித்த ரோகித் சர்மா இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு ஆட்டநாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் ஃபார்ம் என்பதைத் தாண்டி இயற்கையாக கிளாஸ் கொண்ட ரோகித் சர்மா இப்போட்டியில் மிட்சேல் ஸ்டார்க் உள்ளிட்ட ஆஸ்திரேலிய பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு கேப்டனாக இந்தியாவின் வெற்றிக்கு போராடுவார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement