இது வரை செய்யாததை செய்வோம்.. ஃபைனலில் இந்தியாவின் ஸ்கோர்கார்ட் இப்படி தான் இருக்கும்.. ஸ்டார்க் பேட்டி

Advertisement

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 19ஆம் தேதி நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் தொடர்ச்சியான 9 வெற்றிகளை பற்றி நாக் அவுட் சுற்றில் வலுவான நியூசிலாந்தை தோற்கடித்து 10 தொடர் வெற்றிகளுடன் சொந்த மண்ணில் தோல்வியை சந்திக்காமல் கில்லியாக வெற்றி நடை போட்டு வருகிறது.

அதே வேகத்தில் லீக் சுற்றில் 199 ரன்களுக்கு சுருட்டி ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது போல் ஃபைனலிலும் வென்று 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் இந்தியா விளையாட உள்ளது. குறிப்பாக 2003 மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவுக்கு இம்முறை பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.

- Advertisement -

ஸ்டார்க்கின் திட்டம்:
மறுபுறம் ஏற்கனவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் ஆஸ்திரேலியா இப்போட்டியில் இந்தியாவை அவர்களுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சந்தித்த இந்தியாவை மீண்டும் ஃபைனலில் எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக நட்சத்திர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த உலகக் கோப்பையில் பவர் பிளே ஓவர்களில் தாமும் ஹேசல்வுட்டும் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இம்முறை ஃபைனலில் இந்தியா 18/2 என்ற தடுமாற்றத் துவக்கத்தை பெறும் அளவுக்கு அசத்துவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக லீக் போட்டியில் 2/3 என இந்தியாவை தெறிக்க விட்டது போல் மீண்டும் செய்வதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தென்னாப்பிரிக்காவை தோற்கடித்த பின் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எப்போதுமே சிறந்த அணியை எதிர்கொள்வதற்காகவே விளையாடுகிறோம்”

- Advertisement -

“இத்தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடும் அவர்களும் நாங்களும் ஃபைனலில் விளையாட உள்ளோம். இத்தொடர் முழுவதும் நீங்கள் சிறந்த அணியை எதிர்கொள்ள விரும்புவீர்கள். அந்த வகையில் ஃபைனலில் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியை தற்போது எதிர்கொள்ள உள்ளீர்கள். குறிப்பாக தொடரின் முதல் போட்டியில் அவர்களை எதிர்கொண்ட நாங்கள் கடைசியாகவும் எதிர்கொள்வது இந்த உலகக் கோப்பைக்கு நல்ல முடிவாக இருக்கும்”

இதையும் படிங்க: இது ஒரு நல்ல கேள்வி.. 1,32,000 ரசிகர்கள் இருப்பாங்க.. இந்தியாவை சாய்க்கும் பிளான் பற்றி பேசிய ஸ்டீவ் ஸ்மித்

“பவர்பிளே ஓவர்களை எங்களுக்கு சாதகமான வழியில் கொண்டு வர வேண்டும். குறிப்பாக ஜோஸ் மற்றும் நான் இந்த உலகக் கோப்பையில் பவர் பிளே ஓவரில் பெரிய அளவில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. எனவே பவர் பிளவில் நன்றாக செயல்படுவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக 18/2 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுக்க விரும்புகிறோம்” என்று கூறினார். அந்த வகையில் தரமான வீரர்களைக் கொண்ட இரு அணிகள் மோதுவதால் கோப்பையை வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement