IND vs AUS : டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் – வெளியான அறிவிப்பு

AUs vs IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டமானது நாளை பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. நாளை நடைபெறவுள்ள இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இந்த டி20 தொடரை கைப்பற்றும் என்பதனால் நாளைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

IND-vs-NZ

- Advertisement -

இந்த டி20 தொடர் முடிவடைந்த பின்னர் அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேற முக்கியமான தொடராக பார்க்கப்படும் இந்த டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட முடியும். எனவே இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Starc

இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

அதன்படி விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து மீண்டு வரும் மிட்சல் ஸ்டார்க் இந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்து நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் அவரது இடம் முக்கியமானது என்பதனால் முதல் போட்டியில் முன்னெச்சரிக்கை காரணமாகவே அவர் விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தல தோனியின் வழிதான் என் வழி. இனியும் அப்படிதான் நடப்பேன் – கேப்டன் ஹார்டிக் பாண்டியா கருத்து

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது பலமான அணியாக காணப்படுவதால் நிச்சயம் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது சுவாரசியத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.

Advertisement