தல தோனியின் வழிதான் என் வழி. இனியும் அப்படிதான் நடப்பேன் – கேப்டன் ஹார்டிக் பாண்டியா கருத்து

Hardik-Pandya-and-Dhoni
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டியானது நாளை நடைபெற உள்ளது.

IND vs NZ Hardik Pandya

- Advertisement -

இந்நிலையில் லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்த இந்த தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து வெறும் 99 ரன்களை மட்டுமே குவித்தது.

அதன் பின்னர் 100 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியும் மைதானத்தின் மோசமான தன்மை காரணமாக இறுதிவரை போராடி 19.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த 100 ரன்கள் என்கிற இலக்கினை எளிதாக துரத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சூரியகுமார் மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகிய இரண்டு அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் போட்டியை கடைசி வரை கொண்டு சென்றது அனைவரது மத்தியிலும் பெரிய பேசுபொருளாக மாறியது.

Pandya-and-SKY

இந்நிலையில் இப்படி போட்டியை கடைசி வரை கொண்டு சென்று முடிக்க என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கூறுகையில் : போட்டியை கடைசி வரை எடுத்து செல்ல வேண்டும் என்பதே எங்களது யுத்தியாக இருந்தது. இது தோனியுடைய வழி. சிக்கலான போட்டியை கூட இறுதிவரை எடுத்துச் சென்றால் கடைசி கட்டத்தில் போட்டி நமக்கு சாதகமாக மாறும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

- Advertisement -

ஆட்டத்தை விரைவாக முடிக்கும் நோக்கில் விளையாடியிருந்தால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும். அப்படி விக்கெட்டுகளை இழந்தால் போட்டியும் நெருக்கடிக்கு செல்லும். அதே போட்டியை கடைசிவரை எடுத்துச் செல்லும்போது பந்தின் மீது கூடுதல் கவனம் இருக்கும் தெளிவான திட்டமிடலும் கிடைக்கும். அதோடு நம் கையில் விக்கெட்டுகளும் இருக்கும் எனவே எதிரணி அழுத்தத்திற்கு வருவார்கள்.

இதையும் படிங்க : இந்தியாவுக்காக வெளிநாடுகளில் முரளி விஜய் விளையாடிய டாப் 5 சிறந்த இன்னிங்ஸ் இதோ

அந்த சமயத்தில் நாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முடியும். இப்படி தோனி எனக்கு வகுத்துக் கொடுத்த திட்டத்தை தான் நான் தற்போதும் பயன்படுத்தி வருகிறேன் இனியும் பயன்படுத்துவேன் என ஹார்டிக் பாண்டியா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement