இந்தியாவுக்காக வெளிநாடுகளில் முரளி விஜய் விளையாடிய டாப் 5 சிறந்த இன்னிங்ஸ் இதோ

- Advertisement -

தமிழக நட்சத்திர கிரிக்கெட் வீரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2002 முதல் தமிழகத்துக்காக உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் கடந்த 2008ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி ஆரம்பத்தில் தடுமாறிய நிலையில் 2010 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பை வெல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருந்தார். ஆரம்பம் முதலே ஒருநாள் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் அந்த வருடத்திலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பாக வெளிநாடுகளில் சவாலான சூழ்நிலைகளில் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி அசத்திய அவர் சில வருடங்களுக்குப் பின் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.

muralivijay

- Advertisement -

கடைசியாக 2018இல் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இந்தியாவுக்காக விளையாடியிருந்த அவர் 61 டெஸ்ட் போட்டிகளில் 12 சதங்கள் 15 அரை சதங்கள் உட்பட 3982 ரன்களை 38.29 என்ற சராசரியில் எடுத்துள்ளார். இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக வெளிநாடுகளில் முரளி விஜய் விளையாடிய சில தரமான இன்னிங்ஸ் பற்றி பார்ப்போம்:

5. டர்பனில் 97: கடந்த 2013ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு டேல் ஸ்டைன், பிளாண்டர், மோர்னே மொர்க்கல், ஜேக் காலிஸ் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட முரளி விஜய் மீண்டும் நங்கூரமாக நின்று 226 பந்துகளை எதிர்கொண்டு சதத்தை தவற விட்டாலும் 97 ரன்கள் குவித்து அசத்தினார்.

Vijay

இருப்பினும் 2வது இன்னிங்ஸ்சில் அவர் 6 ரன்னில் அவுட்டான நிலையில் ராகனே 96, புஜாரா 70 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா இறுதியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

4. அடிலெய்டில் அபாரம்: 2014 ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 517/7 ரன்கள் குவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் முதல் முறையாக கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி சதமடித்து 115 ரன்கள் குவித்தார். இருப்பினும் இதர வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் 444 ரன்களை மட்டுமே இந்தியா எடுத்த நிலையில் பின்னர் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 290/5 ரன்கள் குவித்தது.

இறுதியில் 364 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கி விராட் கோலியுடன் கைகோர்த்து மிட்சேல் ஜான்சன், நேதன் லயன், ஷேன் வாட்சன் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட முரளி விஜய் 3வது விக்கெட்டுக்கு 185 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதுவரை வெற்றியை நோக்கி பயணித்த இந்தியா அவர் துரதிஷ்டவசமாக 99 ரன்களில் அவுட்டானதும் பின்னர் விராட் கோலியின் 141 ரன்கள் சதத்தையும் தாண்டி எஞ்சிய வீரர்களின் சொதப்பலால் 48 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

- Advertisement -

3. காபாவில் சதம்: அதே சுற்றுப்பயணத்தில் காபாவில் நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு மீண்டும் அற்புதமாக பேட்டிங் செய்த முரளி விஜய் இம்முறை சதத்தை தவறவிடாமல் 144 (213) ரன்கள் விளாசி 408 ரன்கள் குவிக்க உதவினார். ஆனால் அவரை தவிர்த்து ரகானே மட்டும் 81 ரன்கள் எடுத்த எடுத்த நிலையில் 2வது இன்னிங்ஸ்சில் வெறும் 224 ரன்களுக்கு அவுட்டான இந்தியா இறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

,murali vijay

2. நாட்டிங்கம் சதம்: 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு சவலான சூழ்நிலையில் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த முரளி விஜய் சதமடித்து 146 (361) ரன்கள் விளாசினார். 2வது இன்னிங்ஸ்சிலும் 53 ரன்கள் குவித்து அசத்திய அவர் இறுதியில் அப்போட்டியை இந்தியா டிரா செய்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்தார்.

- Advertisement -

1. லார்ட்ஸ் வெற்றி: கடந்த 2014இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் 24 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்தியாவுக்கு தொடக்க வீரராக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய முரளி விஜய் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் ப்ராட், பென் ஸ்டோக்ஸ் போன்ற தரமான பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 11 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்தார்.

vijayaswin

இதையும் படிங்க: வீடியோ : அனல் பறக்க ஸ்லெட்ஜிங் செய்து கொண்ட டுஷன் – பட்லர், மனைவி பிரச்சனை காரணமா – விவரம் இதோ

குறிப்பாக 247 பந்துகளை எதிர்கொண்டு நங்கூரமாக விளையாடி 7வது பேட்ஸ்மேனாக அவுட்டான அவர் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் சரித்திர வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் அப்போட்டியில் இசாந்த் சர்மா 7 விக்கெட்களும் அஜிங்கிய ரகானே சதமும் பேசப்படும் அளவுக்கு முரளி விஜய் இன்னிங்ஸ் பேசப்படுவதில்லை.

 

Advertisement