அனல் பறக்க ஸ்லெட்ஜிங் செய்து கொண்ட டுஷன் – பட்லர், மனைவி பிரச்சனை காரணமா – விவரம் இதோ

Jos Buttler Van Der Dussen
- Advertisement -

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2023 அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜனவரி 29ஆம் தேதியன்று ப்ளூம்போய்ண்டன் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறிங்கிய இங்கிலாந்து அதிரடியாக செயல்பட்டு 50 ஓவரில் 342/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு ஜேசன் ராய் 9, டேவிட் மாலன் 12, பென் டூக்கெட் 20 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் ஹரி. ப்ரூக் 80 (75) கேப்டன் ஜோஸ் பட்லர் 94 (82) மொய்ன் அலி 51 (45) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்களை அதிரடியாக குவித்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 2 விக்கெட்டுகள் சாய்ந்தார். அதைத்தொடர்ந்து 343 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு 77 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்சிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த குவின்டன் டீ காக் 31 (28) ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் வெளுத்து வாங்கிய கேப்டன் தெம்பா பவுமா 14 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 109 (102) ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அனல் பறந்த ஸ்லெட்ஜிங்:
அதை வீணடிக்காத வகையில் மிடில் ஆர்டரில் வேன் டெர் டுஷன் 38 (38) ஐடன் மார்க்ரம் 49 (43) க்ளாஸென் 27 (19) என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்தனர். கடைசியில் டேவிட் மில்லர் அதிரடியாக 58* (37) ரன்களும் மார்கோ யான்சென் 32* (29) ரன்களும் எடுத்ததால் 49.1 ஓவரில் 347/5 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது.

அப்படி விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 19வது ஓவரில் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர் ராசி வேன் டெர் டுஷன் ஆகியோர் கடுமையாக ஸ்லெட்ஜிங் செய்து கொண்டார்கள். குறிப்பாக கேட்ச் பிடிப்பதை தடுக்கும் வகையில் டுஷன் செயல்பட்டதால் இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த பட்லர் பேசியது பின்வருமாறு. “நான் பந்தை பிடிக்க முயற்சிக்கிறேன். உங்களுடைய பிரச்சனை என்ன ராசி? இது எல்லா நேரத்திலும் உங்களைப் பற்றியது அல்ல” என்று கூறினார்.

- Advertisement -

அதற்கு டுஷன். “இல்லை. இவை அனைத்தும் உங்களை பற்றியது” என்று பதிலளித்தார். அதற்கு பட்லர். “நான் கேட்ச் பிடிப்பதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். அதை விட்டுவிட்டு நான் என்ன செய்ய நீங்கள் விரும்புகிறீர்கள்” என்று பதிலளித்தார். அதை கவனித்த அம்பயர் வழக்கம் போல உள்ளே புகுந்து “சரி, அமைதியாக இருங்கள்” என்று கர்ஜித்த குரலில் இருவரையும் அமைதிப்படுத்தினார். ஆனால் இந்த இருவருக்கும் 2022 ஐபிஎல் தொடரிலிருந்தே பனிப்போர் நிலவி வருவதே இதற்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

அதாவது 2022 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக இந்த இருவரும் இணைந்து விளையாடிய போது அதிரடியாக செயல்பட்ட ஜோஸ் பட்லர் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று அசத்தினார். அந்தத் தொடரின் போது கட்டுப்பாட்டு வளையம் நிலுவையில் இருந்ததால் அந்தந்த வீரர்களின் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் உடன் இருக்க ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கொடுத்திருந்தது. அந்த சூழ்நிலையில் டுஷன் தமக்கு கிடைத்த வாய்ப்புகளில் சொதப்பலாக செயல்பட்ட நிலையில் ஜோஸ் பட்லர் பேட்டிங் அபாரமாக இருப்பதாக டுஷன் மனைவி லாரா தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஈகோவை விட்டு கேரக்டரை மாற்றி இந்தியாவை வெற்றி பெற வைத்த சூரியகுமார் யாதவ் – நியூஸிலாந்துக்கு எதிராக புதிய உலக சாதனை

அதை விட அதன் காரணமாக இப்போதெல்லாம் ஜோஸ் பட்லரை தம்முடைய 2வது நினைக்கத் தொடங்கி விட்டதாக அவர் வெளிப்படையாக பேசியிருந்தது சில ரசிகர்களுக்கு இன்னும் நினைவிருக்கலாம். அப்படி ஏற்கனவே தினேஷ் கார்த்திக் – முரளி விஜய் ஆகியோரிடையேயான நட்பு விரிசலடைய மனைவி ஒரு பிரச்சினையாக அமைந்தது போல் இவர்களிடையேயும் இந்த மோதல் ஏற்படுவதற்கு மனைவி தான் பிரச்சனையாக இருக்கலாம் என்று இந்த வீடியோவை பார்க்கும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகிறார்கள்.

Advertisement