இதோட நிறுத்திக்கோங்க. இன்னொரு முறை இப்படி பண்ணா சும்மா விடமாட்டேன். இலங்கை வீரரை எச்சரித்த – மிட்சல் ஸ்டார்க்

Starc
- Advertisement -

ஐந்து முறை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா அணியானது இம்முறை இந்தியாவில் நடைபெற்று வரும் 2023-வது ஆண்டிற்கான 13-ஆவது ஒருநாள் உலகக் கோப்பை தொடரினை மிகவும் மோசமாக துவங்கியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இதுவரை ஆஸ்திரேலிய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்து பரிதவித்து வருகிறது.

இன்னும் ஆஸ்திரேலியா அணிக்கு 7 போட்டிகள் மிஞ்சியுள்ள வேளையில் இனி வெற்றி பாதைக்கு திரும்பினால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதி வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும். ஒருவேளை இன்னும் இரண்டு மூன்று போட்டிகளில் தோல்வியை சந்தித்தால் கூட அவர்களது அரையிறுதி வாய்ப்பு காணாமல் போகும் நிகழ்வு கூட ஏற்படலாம்.

- Advertisement -

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியானது இன்று தங்களது மூன்றாவது லீக் ஆட்டத்தில் இலங்கை அணிக்கு எதிராக லக்னோ மைதானத்தில் விளையாடி வருகிறது. முக்கியமான இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ததால் தற்போது ஆஸ்திரேலிய அணியானது முதலில் பந்துவீசி வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் ஓவரின் முதல் பந்திலேயே பதும் நிசங்காவிற்கு எதிராக மிட்சல் ஸ்டார்க் எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் களத்தில் இருந்த அம்பயர் அதற்கு அவுட் கொடுக்கவில்லை என்பதனால் மிட்சல் ஸ்டார்க் மூன்றாவது அம்பயரிடம் ரிவ்யூ செய்தார். ஆனால் ரீபிளேவிலும் அது நாட் அவுட் என தெரியவே முதல் பந்திலேயே ஆஸ்திரேலியா அணி தங்களது ஒரு ரெவியூ வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

பின்னர் அந்த ஓவரின் அடுத்த பந்தினை வீச வந்த ஸ்டார்க் பந்து வீசாமல் நிறுத்திவிட்டு அம்பயரிடம் சென்று பேட்ஸ்மேன் குசால் பெரேரா கிரீஸை விட்டு வெளியேறுகிறார் என்றும் அவரை வெளியேற வேண்டாம் என்று சொல்லும்படியும் கேட்டுக் கொண்டார். பின்னர் குசால் பேரேராவிடமும் கிரீசை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க : கிங் கோலியால் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம்.. 128 ஆண்டுக்கு பின் கிரிக்கெட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்

அதன் பிறகு மூன்றாவது வரை வீசிய அவர் அந்த ஓவரின் கடைசி பந்தினை வீசும் போது மறுபடியும் பந்து வீசுவதை நிறுத்திவிட்டு இலங்கை வீரர் குசால் மெண்டிசை கிரீஸை விட்டு வெளியேற வேண்டாம் என்று எச்சரித்தார். இப்படி மிட்சம் ஸ்டார்க் குசால் பெரேராவிற்கு மான்கட் எச்சரிக்கை விடுத்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement