கிங் கோலியால் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம்.. 128 ஆண்டுக்கு பின் கிரிக்கெட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்

Virat Kohli Olympics
- Advertisement -

உலக அளவில் மக்களை மகிழ்வித்து வரும் விளையாட்டு போட்டிகளில் கால்பந்து முடி சூடா அரசனாக முதலிடத்தில் இருந்து வருகிறது. அதற்கடுத்தபடியாக அதிக அளவில் விளையாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் இருந்தாலும் அது உலகின் பெரும்பாலான மக்களுக்கு இப்போதும் தெரியாமலேயே இருந்து வருகிறது. அதனால் கிரிக்கெட்டை உலக அளவில் பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.

குறிப்பாக கடந்த வருடம் இங்கிலாந்தில் பர்மிங்கம் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் டி20 வடிவமாக சேர்க்கப்பட்ட கிரிக்கெட் சமீபத்தில் சீனாவில் நடைபெற்று முடிந்த ஆசிய போட்டிகளிலும் 2014க்குப்பின் எடுக்கப்பட்டிருந்தது. அதை விட அந்த முயற்சியின் முக்கிய கட்டமாக ஒலிம்பிக்கில் எப்படியாவது கிரிக்கெட்டை சேர்த்து விட வேண்டும் என்று கடந்த சில வருடங்களாகவே ஐசிசி போராடி வருகிறது.

- Advertisement -

விராட் கோலியின் முகம்:
அந்த வரிசையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை டி20 வடிவமாக சேர்ப்பதற்கு ஐசிசி கோரிக்கை வைத்திருந்தது. அதை ஏற்றுக் கொண்ட ஒலிம்பிக் கமிட்டி இன்று மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு முன்பாக அந்த கோரிக்கையை வைத்தது. அதில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கு உறுப்பினர்களின் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக தற்போது ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

குறிப்பாக பேஸ்பால், லேக்க்ராஸ், கிரிக்கெட், ஸ்குவாஸ், பிளாக் ஃபுட்பால் ஆகிய 5 விளையாட்டுகளை புதிதாக சேர்ப்பதற்காக நடைபெற்ற கூட்டத்தில் 5 விளையாட்டுகளுக்கும் போதிய வாக்குகள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஒலிம்பிக்கில் மொத்தமாக விளையாடப்பட உள்ள 33 விளையாட்டுகளில் இந்த 5 விளையாட்டுகளும் சேர்க்கப்படும் என்று ஒலிம்பிக் வாரியம் தற்போது ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

அந்த அறிவிப்பில் கிரிக்கெட்டை தெரிவுபடுத்துவதற்காக இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் புகைப்படத்தை ஒலிம்பிக் பயன்படுத்தியுள்ளது இந்தியாவுக்கும் மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக உலக அளவில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருந்தும் 25000க்கும் மேற்பட்ட ரன்களையும் 75க்கும் மேற்பட்ட சதங்களையும் அடித்து நவீன கிரிக்கெட்டின் அடையாளமாக இருப்பதால் விராட் கோலி புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு பெருமையாகும்.

Olympics 2028 2

அத்துடன் 128 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஒலிம்பிக்கில் இடம் கிடைத்துள்ளது கிரிக்கெட்டுக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த 1900ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மற்றும் பெல்ஜியம் அணிகள் நல்லது போட்டியை வாபஸ் பெற்ற நிலையில் ஃபைனலில் பிரான்ஸ் அணியை 158 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிரேட் பிரிட்டன் தங்கம் வென்றது. அதன்பின் பல்வேறு காரணங்களால் புறக்கணிக்கப்பட்ட கிரிக்கெட் மீண்டும் ஆடவர், மகளிர் ஆகிய 2 பிரிவுகளாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement