- Advertisement -
இந்திய கிரிக்கெட்

முதல் போட்டியில் வம்பிழுத்த யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை தனது ஸ்டைலில் பழி தீர்த்த மிட்சல் ஸ்டார்க் – விவரம் இதோ

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது டிசம்பர் 6-ஆம் தேதியான இன்று அடிலெய்டு மைதானத்தில் துவங்கியது. பகல் இரவு போட்டியாக துவங்கிய உள்ள இந்த ஆட்டத்தில் இந்திய அணி மூன்று மாற்றங்களுடன் கலமிறங்கி விளையாடி வருகிறது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை பழிதீர்த்த மிட்சல் ஸ்டார்க் :

அந்த வகையில் இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. கடந்த போட்டியில் இடம்பெறாத சுப்மன் கில், ரோகித் சர்மா ஆகியோர் அணி திரும்பியுள்ள வேளையில் அவர்களுக்கு பதிலாக துருவ் ஜுரேல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திரன் அஸ்வின் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் முதல் இன்னிங்க்ஸை தற்போது விளையாடி வரும் இந்திய அணி ஆட்டத்தின் துவக்க முதல் பந்தலையே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை பறிகொடுத்தது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் பந்துவீசுகையில் உங்களது பந்துவீச்சு மிகவும் பொறுமையாக உள்ளது என்று யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கிண்டல் செய்திருந்தார்.

- Advertisement -

அதற்கு பழி தீர்க்கும் விதமாக தற்போது இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை ஸ்டார்க் வீழ்த்தி பதிலடி கொடுத்துள்ளார். அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அஸ்வினுக்கு இடம்.. இந்திய அணியில் 3 மாற்றங்கள்.. 2வது டெஸ்டில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் பேட்டி

ஏற்கனவே பகலிரவு டெஸ்ட் போட்டியில் சிலமுறை பங்கேற்றுள்ள இந்திய அணி அந்த போட்டிகளில் எல்லாம் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி கண்டுள்ளது. அந்தவகையில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -