ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதை அடுத்து இரண்டாவது போட்டி நவம்பர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு அடிலெய்ட் நகரில் பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் துவங்கியது.
அந்தப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களம் இறங்கியது. அதில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக மூத்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஸ்பின்னராக ரோஹித் சர்மா அறிவித்தார். குறிப்பாக கடந்த காலங்களில் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
அஸ்வின் தேர்வு:
அதிலும் ஆஸ்திரேலியாவில் கடந்த முறை நடைபெற்ற பகலிரவு போட்டியில் அவர் நன்றாக பந்து வீசினார். அந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து இப்போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம். அதே போல காயமடைந்த சுப்மன் கில் ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 50* ரன்கள் குவித்து அசத்தினார்.
அதனால் அவரை இந்தப் போட்டியில் தேவ்தூத் படிக்கலுக்கு பதிலாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுத்துள்ளார். மேலும் ரோகித் சர்மா வருவதால் கடந்த போட்டியில் விளையாடிய துருவ் ஜுரேல் இந்தப் போட்டியில் வாய்ப்பு பெறவில்லை. இது பற்றி ரோகித் சர்மா பேசியது பின்வருமாறு. “நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய உள்ளோம். நன்றாக தெரியும் பிட்ச் தற்போது காய்ந்து இருக்கிறது. போதுமான புற்கள் இருக்கிறது”
இந்திய அணி:
“அது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவியை கொடுக்கலாம். ஆனால் போட்டி செல்ல செல்ல பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருக்கும். இதில் அனைவருக்கும் உதவி இருக்கலாம் என்பதால் நல்ல போட்டியாக அமையும். இரண்டு வார இடைவெளியில் பயிற்சிகளை எடுத்து நாங்கள் விளையாட தயாராக உள்ளோம். முதல் போட்டியை வெளியில் இருந்து பார்த்தது நன்றாக இருந்தது”
இதையும் படிங்க:
“இந்த பெரிய தொடரில் எங்களுக்கு சாதகமான முடிவுகளை பெறுவதில் கவனம். எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சியுடன் தயாராக உள்ளனர். முதல் போட்டியில் விட்ட வேகத்தை நாங்கள் தொடர விரும்புகிறோம். நான், கில், அஸ்வின் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புகிறோம். இம்முறை நான் மிடில் ஆர்டரில் விளையாடுவது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் அந்த சவாலுக்கு தயாராக உள்ளேன்” என்று கூறினார்.



