- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணிக்கு எதிராக இப்படி ஒரு மோசமான தோல்வியை நாங்கள் சந்திக்க இதுவே காரணம் – மிட்சல் மார்ஷ் வருத்தம்

இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆஸ்திரேலியா அணியானது இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தி இருந்தது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னில வகித்தது.

இந்திய அணியிடம் அடைந்த தோல்விக்கு இதுவே காரணம் : மிட்சல் மார்ஷ் வருத்தம்

அதனை தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் இந்த தொடரானது ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் அடைந்தது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற நான்காவது டி20 ஆட்டத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றி பெற்றதால் தற்போதைய நிலையில் இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.

- Advertisement -

இன்றைய நான்காவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 167 ரன்கள் குவிக்க 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த சவாலான இலக்கை ஆஸ்திரேலிய அணி விரட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே குவித்தனர்.

இதன் காரணமாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக இன்று அடைந்த தோல்வி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சல் மார்ஷ் கூறுகையில் : 167 ரன்கள் என்பது இந்த மைதானத்தில் பார் ஸ்கோர் தான். இந்த இலக்கு அடிக்கக்கூடிய ஒரு இலக்கு தான். ஆனாலும் இந்த மைதானத்தில் சில சவால்கள் இருந்தன.

- Advertisement -

இந்த போட்டியில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிகள் சரியாக அமைந்திருந்தால் நாங்கள் போட்டியில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் எந்த ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பும் இந்த போட்டியில் அமைக்க முடியவில்லை. இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். அவர்கள் உலகத்தரம் வாய்ந்த அணி என்பதற்கு ஏற்றாற்போல் மிகச் சிறப்பாக விளையாடினர்.

இதையும் படிங்க : நான்காவது டி20 போட்டியில் நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சி

இந்த மைதானத்தில் இப்படி ஒரு ஆட்டம் இந்திய அணியிடம் சிறப்பாக இருந்தது. டி20 உலகக்கோப்பை அருகில் வர இருப்பதால் இன்னும் இதுபோன்ற அழுத்தமான போட்டிகளில் விளையாட விரும்புகிறோம் என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -