நான்காவது டி20 போட்டியில் நாங்கள் பெற்ற அசத்தலான வெற்றிக்கு இதுதான் காரணம் – சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சி

SKY
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாட்டிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது.

நான்காவது போட்டியில் வெற்றிபெற இதுவே காரணம் : சூரியகுமார் யாதவ் மகிழ்ச்சி

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 46 ரன்களையும், அபிஷேக் ஷர்மா 28 ரன்களையும் குவித்தனர். ஆஸ்திரேலியா அணி சார்பாக நாதன் எல்லீஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே குவித்தது. அதனால் இந்திய அணி இந்த போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.

இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு பேட்ஸ்மேன்கள் தான் காரணம். அதிலும் குறிப்பாக அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பவர்பிளேவில் மிகவும் ஸ்மார்ட்டாக விளையாடினர்.

- Advertisement -

ஏனெனில் இந்த மைதானம் 200க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கக்கூடிய மைதானம் இல்லை என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போன்று விளையாடினர். பேட்டிங்கில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக கருதினோம். அதேபோன்று வெளியில் இருந்து கௌதம் கம்பீரும் இந்த மைதானம் குறித்த தெளிவான புரிதலை எங்களுக்கு வழங்கினார். அதேபோன்று பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக மைதானத்தின் தன்மைக்கு ஏற்றவாறு பந்து வீசியதால் ஆஸ்திரேலிய வீரர்களை அழுத்தத்தில் கொண்டுவர முடிந்தது.

இதையும் படிங்க : 119க்கு அவுட்.. ஆஸியை ஊதித்தள்ளிய இந்தியா.. பாகிஸ்தானை முந்தி 2வது வரலாற்று சாதனை வெற்றி

நமது அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை பந்துவீசிய அனைவருமே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். நமது அணியில் இரண்டு மூன்று ஓவர்களை வீசக்கூடிய பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். சில சமயம் நான்கு ஓவர்களை வீசும் அளவிற்கும் திறமையுடன் உள்ளனர் என்று அனைவரையும் சூரியகுமார் யாதவ் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement