- Advertisement -
ஐ.பி.எல்

கிரிக்கெட் ஒரு வேடிக்கையான ஆட்டம்.. இப்படி நடப்பதெல்லாம் சகஜம் தான் – மிட்சல் மார்ஷ் பேட்டி

லக்னோ நகரில் நேற்று நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59 வது லீக் போட்டியானது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதிய வேளையில் இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் லக்னோ அணி இந்த தொடரில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்தது. அதேவேளையில் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு கடினமாக மாறியுள்ளது.

சி.எஸ்.கே அணிக்கு எதிரான சிறப்பான ஆட்டத்திற்கு பின்னர் பேசிய : மிட்சல் மார்ஷ்

அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த போட்டியின் போது லக்னோ அணி சார்பாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்சல் மார்ஷ் 38 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 7 சிக்சர் என 90 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர் கொடுத்த இந்த அதிரடியான துவக்கம் காரணமாகவே லக்னோ அணி இந்த இலக்கினை எளிதாக எட்டியதால் அவருக்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்றைய இந்த போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய மிட்சல் மார்ஷ் கூறியதாவது : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்த தொடர் முழுவதுமே பல சறுக்கல்களை சந்தித்து இருந்தாலும் ஒரு நல்ல அணியாகவே நான் எங்களது அணியை பார்க்கிறேன்.

ஏனெனில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் சரி, திறமை வாய்ந்த இளம் வீரர்களும் சரி சரியான கலவையில் எங்கள் அணியில் உள்ளனர். ஆனால் இந்த தொடரில் களத்தில் எங்களால் அவ்வளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் இந்த போட்டியில் அடைந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஜாஸ் இங்கிலீஷ் உடன் நான் கடந்த எட்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ரொம்ப பெருமையா இந்த விடயத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு – ரிஷப் பண்ட் ஹேப்பி

அவருடன் இணைந்து விளையாடுவது மிகச் சிறப்பான ஒரு அனுபவமாகவும் பார்க்கிறேன். இந்த போட்டியில் 90 ரன்களில் நான் ரன் அவுட்டானேன். கிரிக்கெட் ஒரு வேடிக்கையான ஆட்டம் இதுபோன்று கிரிக்கெட்டில் நடப்பது இயல்பு தான். அதைப்பற்றி பெரிதாக யோசிக்க விரும்பவில்லை. என்னுடைய பேட்டிங்கை தற்போது நான் விரும்பி விளையாடி வருகிறேன் என மிட்சல் மார்ஷ் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -