ரொம்ப பெருமையா இந்த விடயத்தை ஏற்றுக்கொள்கிறோம்.. சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு – ரிஷப் பண்ட் ஹேப்பி

Rishabh Pant
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று லக்னோ நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59 போட்டியில் லீக் போட்டியில் விளையாடியிருந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் தங்களது நான்காவது ஆறுதல் வெற்றியை பெற்றது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

சி.எஸ்.கே அணியை வீழ்த்தியது குறித்து பேசிய : ரிஷப் பண்ட்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் அடைந்த வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : உண்மையிலேயே நாங்கள் பெற்ற இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் நீண்ட நாட்களாக இதுகுறித்து தான் பேசி வந்தோம். ஆனால் தொடரின் இறுதியில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. உண்மையிலேயே இந்த வெற்றியை நாங்கள் பெருமையுடன் ஏற்றுக் கொள்கிறோம். ஏனெனில் இன்றைய போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக விளையாடியதாக உணர்கிறோம்.

இந்த போட்டியில் ஆகாஷ் சிங் மிகச்சிறப்பாக பந்து வீசினார். இந்த தொடர் முழுவதுமே அற்புதமாக தயாராகி வந்த அவருக்கு கிடைத்த வாய்ப்பை அவர் மிக சரியாக செயல்படுத்தி உள்ளார். அதேபோன்று பேட்டிங்கில் துவக்க வீரர்கள் மற்றும் மூன்றாவது இடத்தில் நிக்கோலஸ் பூரான் என மூவரும் வெளிநாட்டு வீரர்களாகவே களமிறக்க நினைத்தோம். ஆனால் ஒரு சில போட்டிகளில் அதுபோன்று நடக்காமல் போனது.

- Advertisement -

இதையும் படிங்க : சில சமயம் எதிரணி இப்படி ஆடும்போது ஏத்துக்கிட்டு தான் ஆகனும்.. தோல்விக்கு பிறகு – ருதுராஜ் கெய்க்வாட் வருத்தம்

இருப்பினும் இந்த போட்டியில் அவர்கள் விளையாடிய விதம் அற்புதமாக இருந்தது. எங்கள் அணியில் இந்த சீசன் முழுவதும் பல மாற்றங்கள் இருந்தன. தற்போது அனைத்தும் சரியாக இருப்பதாக நினைக்கிறேன். இனிவரும் ஒரு சில ஆட்டங்களிலும் பெருமைக்குரிய விதத்தில் விளையாடுவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement