இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 59-வது லீக் போட்டியானது லக்னோ நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
லக்னோ அணிக்கெதிரான தோல்வி குறித்து பேசிய : ருதுராஜ் கெய்க்வாட்
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 188 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்தது தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய சி.எஸ்.கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியதாவது : இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகம் இருந்ததால் பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது. அதிலும் குறிப்பாக முதல் இன்னிங்சின் போது பெரிய ஷாட்டிற்கு செல்வது மிகவும் சவாலாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் 160 முதல் 170 ரன்கள் வரை எதிர் பார்த்தோம்.
ஆனால் இறுதியில் 180 ரன்களுக்கு மேல் வந்ததும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனாலும் போட்டியின் இரண்டாம் பாதியில் லக்னோ அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு எங்களை வீழ்த்தி விட்டனர். அதிலும் குறிப்பாக லக்னோ அணியின் இரண்டு ஓப்பனர்களும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜாஸ் இங்கிலீஷ் சற்று நிதானமாக ஆடினாலும், மிட்சல் மார்ஷ் மிகச் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க : லக்னோ அணிக்கெதிரான போட்டியில் சி.எஸ்.கே தோல்வி.. புள்ளி பட்டியலில் சறுக்கல் – பிளே ஆப் செல்லுமா?
இந்த போட்டியில் பந்துவீச்சில் நாங்கள் சில தவறுகளை செய்திருந்த வேளையில் அவர்கள் அதனை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஒருசில சமயம் டி20 போட்டிகளில் எதிரணி இதுபோன்று நல்ல கிரிக்கெட்டை விளையாடும் போது நாம் அதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். அவர்கள் விளையாடிய விதத்திற்கு இந்த வெற்றி தகுதியான ஒன்றுதான். அவர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்தியுள்ளனர் என ருதுராஜ் கெய்க்வாட் கூறியது குறிப்பிடத்தக்கது.



