வாழ்த்திய பெங்களூரு ரசிகர்கள்.. ராஸ் டெய்லரின் தனித்துவ உலக சாதனையை சமன் செய்த மார்ஷ்

Mitchell Marsh
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 20ஆம் தேதி நடைபெற்ற லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது வெற்றியை பதிவு செய்தது. அதனால் கடந்த வாரம் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த அந்த அணி போராடி தற்போது 4வது இடத்திற்கு முன்னேறி மீண்டும் வெற்றிப் பாதையில் நடக்கத் தொடங்கியுள்ளது.

பெங்களூருவில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 367/9 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர்கள் டேவிட் வார்னர் 163, மிட்சேல் மார்ஷ் 121 ரன்கள் அடித்து அசத்திய நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஷாஹீன் அப்ரிடி 5 ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
அதைத் தொடர்ந்து 368 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் அப்துல்லா ஷபிக் 64, இமாம்-உல்-ஹக் 70 ரன்களை அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் பாபர் அசாம் 18, முகமது ரிஸ்வான் 46, சவுத் ஷாக்கில் 30 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 45.3 ஓவரில் 305 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டி வென்ற ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஆடம் ஜாம்பா 3 விக்கெட்கள் சாய்த்தார்.

இந்த வெற்றிக்கு 163 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகன் விருதை வென்றார். சொல்லப்போனால் அவர் கூட 10 ரன்னில் கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் தவறவிட்ட அதிர்ஷ்டத்துடன் சதமடித்தார். ஆனால் மறுபுறம் ஆரம்பம் முதலே தடுமாறாமல் விளையாடிய மிட்சேல் மார்ஷ் பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடி 10 பவுண்டரி 9 சிக்சருடன் 121 (108) ரன்கள் குவித்து வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

- Advertisement -

அதை விட அக்டோபர் 20ஆம் தேதி தம்முடைய 32வது பிறந்த நாளை கொண்டாடிய அவர் சதமடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்து அந்நாளை மறக்க முடியாத பொன் நாளாக மாற்றினார் என்றே சொல்லலாம். சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் தம்முடைய பிறந்தநாளில் சதமடித்த 2வது வீரர் தனித்துவமான சாதனையையும் மிட்சேல் மார்ஷ் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியர்களே.. 400 மாஸ் சேசிங்கை பாருங்க.. ஆகாஷ் சோப்ராவிடம் சவால் விட்டு பல்ப் வாங்கிய பாக் ரசிகர்

இதற்கு முன் கடந்த 2011 உலகக்கோப்பையில் இதே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் தம்முடைய பிறந்தநாளில் சதமடித்து இந்த சாதனையை முதல் வீரராக படைத்திருந்தார். அந்த வகையில் தனித்துவமான சாதனை படைத்த அவருக்கு ஃபீல்டிங் செய்யும் போது பெங்களூரு ரசிகர்கள் ஹேப்பி பர்த்டே மார்ஷ் என்று ஒன்றாக சேர்ந்து ஆரவாரமாக கூச்சலிட்டு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement