உலககோப்பை இறுதிப்போட்டியில் மோதும் 2 அணிகள் இதுதான். இந்தியா கிடையாது – மிட்சல் மார்ஷ் பதில்

Mitchell-Marsh
- Advertisement -

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் ஐம்பது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கும் வேளையில் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லப் போவது யார்? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர் மத்தில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடருக்கான அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரும் இந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் அணி எது? அரையிறுதி போட்டியில் விளையாடப்போகும் அணி எது? எந்த வீரர்கள் அதிக ரன்கள் குவிக்கப்போகிறார்கள்? அதிக விக்கெட்டுகளை வீழ்த்தப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த பல்வேறு கருத்துக்கள் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி ஆல்ரவுண்டான மிட்சல் மார்ஷ் எதிர்வரும் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த 2 அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும் என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். தற்போது மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ஆடம் கில்க்றிஸ்ட், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகன் ஆகியோருடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் பங்கேற்ற மிட்சல் மார்ஷ் இந்த உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் எது? என்பது குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மிட்சல் மார்ஷ் கூறுகையில் : என்னை பொருத்தவரை நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் தான் இறுதிப் போட்டியில் விளையாடும் என்று பதிலளித்தார். இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியே கோப்பையை கைப்பற்ற சாதகம் அதிகம் என்று பலரும் பேசி வரும் வேளையில் மிட்சல் மார்ஷ் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் தான் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று கூறியுள்ளது பலரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : IND vs PAK : என்னாங்க பெரிய அட்டாக், இதை செஞ்சா பாக் பவுலர்கள் தெறிச்சு ஓடுவாங்க – இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஹர்பஜன் அட்வைஸ்

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்று வரும் இந்த தொடரில் மிட்சல் மார்ஷ் கேப்டனாக செயல்பட்டாலும் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியே பங்கேற்க உள்ளது. அந்த தொடரில் மிட்சல் மார்ஷ் ஒரு முக்கிய பங்கு வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement