ஆசிய கோப்பை 2023 தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இலங்கையின் கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முக்கியமான சூப்பர் 4 போட்டியில் மோதுகின்றன. முன்னதாக இதே தொடரில் இலங்கையின் கண்டி நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு ஷாஹீன் அப்ரிடியின் தரமான வேகப்பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாத விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 66/4 என சரிந்த இந்தியாவை இசான் கிசான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் நிலையாக நின்று 226 ரன்கள் எடுக்க உதவிய நிலையில் மழை வந்ததால் ரத்து செய்யப்பட்டது. எனவே இம்முறை இந்தியா வெற்றி காண்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப், நாசீம் ஷா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட பாகிஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஹர்பஜனின் அட்வைஸ்:
இந்நிலையில் ஷாஹீன் அப்ரிடிக்கு விக்கெட் கொடுக்காமல் ஆரம்பகட்ட நிலைமையை சமாளியை சமாளித்து விட்டால் இந்தியாவால் எளிதாக 300 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். அதை செய்வதற்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தங்களுடைய ஈகோவை வெளியே வைத்து விட்டு குறைந்தபட்சம் 15 ஓவர்கள் வரையாவது நிலைத்து நின்று விளையாடினால் மிகவும் எளிதாக பாகிஸ்தான் பவுலர்களை தெறிக்க விட முடியும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.
“ஷாஹீனுக்கு எதிராக விக்கெட்டை விடக்கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருக்க வேண்டும். எனவே அவர் விக்கெட்டை எடுக்காமல் போனால் இதர பவுலர்கள் மீதும் அழுத்தம் தாமாக உருவாகி விடும். அப்படி அழுத்தம் உருவாகும் போது உலகத்தரம் வாய்ந்த பவுலிங் அட்டாக் என்று அவர்கள் பேசும் பவுலர்கள் தாமாக ஒதுங்கி செல்வார்கள். எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்கள் அடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும்”
“அதற்கு சுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் புதிய பந்தை சிறப்பாக எதிர்கொண்டு 15 ஓவர்கள் வரை விளையாடினால் இந்தியாவுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்படாது. எனவே கில், ரோஹித் மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்களுடைய ஈகோவை புறந்தள்ளி விட்டு புதிய பந்தில் பாகிஸ்தான் பவுலர்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும். அதற்காக சாகினுக்கு எதிராக அவர்கள் ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் அடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை” என்று கூறினார்.
இதையும் படிங்க: கண்ணு வெய்க்காதீங்க, உங்களோட தயவு பாகிஸ்தானுக்கு தேவையில்லை – இந்திய வீரர்களின் வாயடைத்த முன்னாள் வீரர்
முன்னதாக தங்களுடைய விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று கருதாமல் ரோகித் சர்மா போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விளையாடினால் ஷாஹீனை எளிதாக சமாளிக்கலாம் என்று கௌதம் கம்பீரும் தெரிவித்திருந்தார். எனவே அந்த வழியை பின்பற்றி இம்முறை இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பவுலர்களுக்கு பதிலடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.