கண்ணு வெய்க்காதீங்க, உங்களோட தயவு பாகிஸ்தானுக்கு தேவையில்லை – இந்திய வீரர்களின் வாயடைத்த முன்னாள் வீரர்

Mushtaq Ahmed
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் 4 சுற்று நடைபெறுகிறது. இப்போட்டியில் இன்று ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளும் ஆக்ரோஷமாக மோதும் என்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இவ்விரு அணிகளை பொறுத்த வரை இந்தியாவை விட பாகிஸ்தானின் பந்து வீச்சு மிகவும் பலமானதாகவும் தரமானதாகவும் பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி, நாசீம் ஷா ஆகியோரால் பாகிஸ்தானின் பவுலிங் ஆகியோரால் உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து உலகின் பெரும்பாலான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு வருகிறார். அந்த வரிசையில் இத்தொடரின் லீக் சுற்றில் நவீன கிரிக்கெட்டின் தரமான பேட்ஸ்மேன்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை ஒரே போட்டியில் அவுட்டாக்கிய முதல் பவுலர் என்ற சாதனை படைத்தார்.

- Advertisement -

கண்ணு வைக்காதீங்க:
எனவே இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தானின் தரமான பவுலர்களை ரோகித் சர்மா, விராட் கோலி போன்றவர்கள் சிறப்பாக எதிர்கொள்வது கட்டாயமாகிறது. முன்னதாக நிறைய முன்னாள் வீரர்களை போலவே ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் ஆகியோர் தரமான பவுலர்கள் என்றும் அவர்களால் உலகிலேயே பாகிஸ்தான் சிறந்த பாகிஸ்தான் சிறந்த பவுலிங் அட்டாக்கை கொண்ட அணிகளில் ஒன்றாக இருப்பதாகவும் ரோகித் சர்மாவும் பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதாக விராட் கோலியும் செய்தியாளர்கள் சந்திப்பில் பாராட்டியிருந்தனர்.

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள் தங்களுடைய பவுலர்களை பற்றி அதிகமாக புகழ்ந்து பாராட்டுவது தேவையற்றது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் முஸ்டாக் அகமது தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “எதிரணியைச் சேர்ந்த ஒரு கேப்டன் உங்களை பற்றி அல்லது உங்களுடைய அணி வீரர்களை பற்றி ஊடகங்களில் பேசினால் உங்களுடைய கண்கள் அவற்றை நோக்கி செல்லும்”

- Advertisement -

“அந்த சிறிய விஷயம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. மேலும் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்வு போதெல்லாம் அவர்கள் எதிரணியை பற்றி அதிகமாக பேசு பாராட்டுகளை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக அவர்கள் சிறந்தவர்கள். சிறந்த இளம் வீரர்களை கொண்டிருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை வெளியிடுகின்றனர். ஆனால் இதுவும் ஒரு வகையான மனதளவிலான விளையாட்டாகும்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா 2023 உ.கோ ஜெயிச்சு கொடுப்பாருன்னு கனவு காணாதீங்க – இந்திய ரசிகர்களை எச்சரித்த முன்னாள் ஆஸி வீரர்

“இந்திய அணிலும் மகத்தான வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் மன்னிக்கவும். அவர்கள் பாகிஸ்தானை தேவையின்றி அதிகமாக பாராட்டி புகழ்கின்றனர். அதே சமயம் அந்த பாராட்டுகளை பெறும் அளவுக்கு நாங்கள் வளர்ந்துள்ளது எங்களுக்கு நல்ல அறிகுறியாகும். குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஷாஹீன், நசீம், பாபர் அசாம் ஆகியோரை தொடர்ந்து பாராட்டுகின்றனர். இது எங்களது வளர்ச்சியை காட்டும் நல்ல அறிகுறியாகும்” என்று கூறினார்.

Advertisement