ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நாக் அவுட் சுற்றை நோக்கி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் புள்ளி பட்டியலில் டாப் 4 இடங்களை பிடித்து செமி ஃபைனல் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அந்த 4 அணிகளில் புள்ளி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் 2வது அரையிறுதியில் மோதுவது உறுதியாகியுள்ளது.
அதே சமயம் லீக் சுற்றில் முதல் 8 போட்டிகளிலும் தோல்வியை சந்திக்காமல் தொடர்ந்து வென்று முதலிடம் பிடித்த இந்தியாவும் 4வது இடத்தை பிடித்த நியூஸிலாந்தும் நவம்பர் 15ஆம் தேதி மும்பையில் நடைபெறும் முதல் செமி ஃபைனலில் விளையாடுவதும் உறுதியாகியுள்ளது. இப்போட்டிகளில் வெல்லும் 2 அணிகள் மட்டுமே நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் மாபெரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற உள்ளன.
ஃபைனல் கணிப்பு:
அதனால் தோற்றால் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலைமையில் நடைபெறும் இந்த அரையிறுதியில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற அனைத்து 4 அணிகளும் தயாராக இருக்கின்றன. வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 1999 உலகக்கோப்பை உட்பட பெரும்பாலும் ஆஸ்திரேலியா வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது.
சொல்லப்போனால் இந்த உலகக் கோப்பையிலும் ஆரம்பத்தில் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடிய அந்த அணி அதன் பின் அடுத்தடுத்த வெற்றிகளால் செமி ஃபைனலுக்கு வந்துள்ளது. எனவே தென்னாப்பிரிக்காவை இம்முறை தோற்கடித்து ஆஸ்திரேலிய 6வது கோப்பையை வெல்வதற்காக ஃபைனலுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. மறுபுறம் நியூசிலாந்துக்கு எதிராக 2019 செமி ஃபைனல் உட்பட வரலாற்றில் பெரும்பாலும் ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்விகளையே சந்தித்து வருகிறது.
அதனால் இம்முறை நியூஸிலாந்து வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சொந்த மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் அனைத்து வீரர்களும் உச்சகட்ட ஃபார்மில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். எனவே இம்முறை நியூஸிலாந்தை தோற்கடித்து இந்தியா வரலாற்றை மாற்றும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் 2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெறும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சோயப் மாலிக் கணித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரியாணி எல்லாம் நல்லா இருந்திச்சா? அப்புறம் என்ன கிளம்புங்க. பாகிஸ்தான் அணியை கலாய்த்த – வீரேந்திர சேவாக்
அதே நிகழ்ச்சியில் பேசிய மிஸ்பா-உல்-ஹக் இந்தியா – தென்னாப்பிரிக்கா மோதுவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்து பேசியது பின்வருமாறு. “இந்தியா – தென்னாப்பிரிக்கா. செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ள 4 அணிகளுமே நன்றாக இருக்கின்றன. எனவே போட்டி நாளன்று யார் சிறப்பாக செயல்பாடுகிரார்களோ அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். ஆனாலும் 4 அணிகளையும் நீங்கள் பார்க்கும் போது சமநிலையைப் பொறுத்த வரை இந்தியா மற்ற 3 அணிகளை காட்டிலும் சிறந்த அணியாக இருக்கிறது” என்று கூறினார்.