அமெரிக்காவில் மிஸ்ஸே ஆகாது, ஐபிஎல் தோல்விக்கு சென்னையின் சூப்பர் கிங்ஸை பழிதீர்த்த மும்பையின் எம்ஐ – ஃபைனல் சென்றது எப்படி?

MLC 3
- Advertisement -

அமெரிக்காவில் ஜூலை 14இல் துவங்கிய மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மொத்தம் 6 அணிகள் விளையாடிய நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் கான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. மறுபுறம் லீக் சுற்றில் அசத்திய சீட்டல் ஆர்க்கஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், வாஷிங்டன் ஃபிரீடம், எம்ஐ நியூயார்க் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றன. அதை தொடர்ந்து நேற்று நடைபெற்ற பிளே ஆப் சுற்றின் குவாலிபயர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் 2வது இடம் பிடித்த டெக்ஸாஸ் அணியை தோற்கடித்த சீட்டல் நேரடியாக ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

மேலும் வாசிங்டனை தோற்கடித்த நியூயார்க் குவாலிபயர் 2 போட்டியில் விளையாட தகுதி பெற்றது. அந்த நிலையில் ஜூலை 29ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6:00 மணிக்கு டாலஸ் நகரில் நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் திகழும் சென்னை நிர்வகிக்கும் டெக்ஸாஸ் மற்றும் மும்பை நிர்வகிக்கும் எம்ஐ அணிகள் மோதின.

- Advertisement -

பழிதீர்த்த எம்ஐ:
அந்த போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய டெக்சாஸ் அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸை 6 (9) ரன்னில் அவுட்டாக்கிய ட்ரெண்ட் போல்ட் அடுத்து வந்த மிட்சேல் சாட்னரையும் 6 ரன்களில் காலி செய்தார். அடுத்து வந்த கோடி செட்டியும் 14 (13) ரன்களில் அவுட்டானதால் 34/3 என தடுமாறிய டெக்சாஸ் அணியை 4வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்ற முயன்ற மிலிந்த் குமார் 37 (34) ரன்களில் ரசித் கான் சுழலில் அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மறுபுறம் நங்கூரமாக விளையாடிய டேவோன் கான்வேயை 38 (35) ரன்களில் ட்ரெண்ட் போல்ட் காலி செய்தார்.

இறுதியில் டேவிட் மில்லர் 17 (10) டேனியல் சாம்ஸ் 8 (12) என முக்கிய பேட்ஸ்மேன்களும் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 20 ஓவர்களில் டெக்சாஸ் அணியை 158 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி பந்து வீச்சில் மிரட்டிய எம்ஐ சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும் டிம் டேவிட் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 159 ரன்களை துரத்திய எம்ஐ அணிக்கு ஸ்டேடன் 6 (12) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மறுபுறம் 5 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்ட ஜஹாங்கீர் 36 (18) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர்களைத் தொடர்ந்து கேப்டன் நிக்கோலஸ் பூரான் தனது பங்கிற்கு 2 பவுண்டரியுடன் 23 (20) ரன்களும் டிம் டேவிட் 4 சிக்ஸருடன் 33 (20) ரன்களும் எடுத்து அவுட்டானார்கள். அந்த துவக்கத்தை வீணடிக்காத வகையில் கடைசியில் தேவாலட் ப்ரேவிஸ் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (33) ரன்களும் டேவிட் வீஸ் 19* (11) ரன்களும் எடுத்ததால் 19 ஓவர்களிலேயே 162/4 ரன்கள் எடுத்த எம்ஐ 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஜூலை 31இல் நடைபெறும் மாபெரும் ஃபைனலில் சீட்டல் அணியை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

மறுபுறம் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறிய டெக்சாஸ்க்கு ரஷ்டி தேரன், முகமது மோசின், கால்வின் செவேஜ் தலா 1 விக்கெட் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை. இந்த தொடரில் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் கேப்டன் டு பிளேஸிஸ் ஃபார்மை இழந்து ஒரு அரை சதம் கூட அடிக்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மறுபுறம் நாக் அவுட்டின் 2 போட்டிகளிலும் ட்ரெண்ட் போல்ட் தலா 4 விக்கெட்களை எடுத்தது எம்ஐ ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது.

இதையும் படிங்க:அவங்க இல்லாத ஒரு வேர்ல்டுகப்ப கற்பனை பண்ணி கூட பாக்க முடியல – கபில் தேவ் வருத்தம்

அதை விட இந்த வருடம் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் 2 முறையும் மும்பையை தோற்கடித்த சென்னை ஃபைனல் சென்று கோப்பையை வென்றது. அதே போலவே இந்த தொடரின் லீக் சுற்றில் சென்னை நிர்வகிக்கும் டெக்சாஸ் அணியிடம் எம்ஐ வீழ்ந்தது. ஆனால் அவை அனைத்திற்கும் இந்த போட்டியில் தோற்கடித்து டெக்சாஸை வெளியேற்றிய எம்ஐ கேப்டன் பொல்லார்ட் ஒருமுறை ப்ராவோ வழி அனுப்பியதை போலவே விமானத்தில் ஏறி வீட்டுக்கு செல்லுங்கள் என்று சைகை காட்டி பழி தீர்த்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement