அவங்க இல்லாத ஒரு வேர்ல்டுகப்ப கற்பனை பண்ணி கூட பாக்க முடியல – கபில் தேவ் வருத்தம்

Kapil-Dev
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐ.சி.சி யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பையில் சாம்பியன் பட்டம் பெற்ற இந்திய அணியானது அதனை தொடர்ந்து நடைபெற்ற 2015 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் கோப்பை தவறவிட்டது. இருப்பினும் இம்முறை சொந்த மண்ணில் முழுவதுமாக நடைபெற இருக்கும் இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

ROhit Sharma IND vs WI

- Advertisement -

50 ஓவர் உலககோப்பை போட்டிகள் நெருங்கி வரும் வேளையில் இந்த உலகக் கோப்பையில் விளையாடும் அணிகள் குறித்த பல்வேறு கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த உலகக்கோப்பை தகுதி சுற்று போட்டிகள் ஜிம்பாப்பேவில் முடிவடைந்த வேளையில் அந்த தகுதிச்சுற்று போட்டிகளில் கத்துக்குட்டி அணிகளிடம் கூட தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் அணியானது வரலாற்றிலேயே முதல் முறையாக உலக கோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளது. ஒரு காலத்தில் ஜாம்பவானியாக திகழ்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏற்பட்ட இந்த நிலைமை அந்நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.

WI vs SCO

அதோடு உலகெங்கிலும் உள்ள ரசிகர்களும், முன்னாள் வீரர்கள் பலரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலை குறித்து தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கபில் தேவ் வெஸ்ட் இண்டிஸ் அணி குறித்து கூறுகையில் :

- Advertisement -

இந்தியாவில் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடாதது மிகவும் வேதனை அளிக்கிறது. அவர்கள் இல்லாத ஒரு உலகக் கோப்பை தொடரை கற்பனை செய்வது கூட கடினம். அத்தகைய சிறந்த வீரர்களை உருவாக்கி வைத்திருக்கும் அணி அது. இப்போது அந்த அணி இந்த தொடரில் விளையாட முடியவில்லை என்று நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது.

இதையும் படிங்க : IND vs WI : 2ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

எனக்கே இவ்வளவு கஷ்டமாக இருக்கும்போது அவர்கள் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அவர்கள் இந்த மோசமான நிலையில் இருந்து மீண்டும் வருவார்கள் என நம்புவதாக கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement