IND vs WI : 2ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

Rohit-IND
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து இந்து தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Mukesh-Kumar-1

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியானது ஜூலை 29-ஆம் தேதி இன்று பார்படாஸ் நகரில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில் முதல் போட்டியின் போது பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? மேலும் ஒரு சில மாற்றங்கள் அணியில் இருக்குமா? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Rohit-1

ஆனால் இன்றைய இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் முதல் போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றதால் நிச்சயம் அதே அணி தான் இந்த இரண்டாவது போட்டியிலும் விளையாடும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஒருவேளை இந்த இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் பட்சத்தில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் மாற்றம் இருக்குமே தவிர இந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று கூறப்படுகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : வீடியோ : கடமையில் தவறாமல் தாரசு முள் போன்ற தீர்ப்பு வழங்கி – ஸ்மித்தை காப்பாற்றிய இந்திய அம்பயர், பாராட்டிய அஸ்வின்

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) இஷான் கிஷன், 5) ஹார்டிக் பாண்டியா, 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) உம்ரான் மாலிக், 11) முகேஷ் குமார்.

Advertisement