கடமையில் தவறாமல் தாரசு முள் போன்ற தீர்ப்பு வழங்கி – ஸ்மித்தை காப்பாற்றிய இந்திய அம்பயர், பாராட்டிய அஸ்வின்

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடுகிறோம் என்ற பெயரில் கையில் வைத்திருந்த வெற்றிகளை கோட்டை விட்ட இங்கிலாந்து விமர்சனத்திற்குள்ளான போதிலும் 3வது போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. அதே போல மான்செஸ்டரில் நடைபெற்ற 4வது போட்டியிலும் மிகச் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்தின் வெற்றியை மழை தடுத்ததால் டிராவில் முடிந்தது.

அதனால் தப்பிய ஆஸ்திரேலியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆஷஸ் கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. அந்த நிலையில் ஜூலை 27ஆம் தேதி லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 283 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

தரமான தீர்ப்பு:
ஜாக் கிராவ்லி 22, ஜோ ரூட் 4, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3, டூக்கெட் 41, மொய்ன் அலி 34 என அந்த அணியின் முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக அதிகபட்சமாக பென் ஹரி ப்ரூக் 85 (91) ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளை சாய்ந்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டேவிட் வார்னர் 24, உஸ்மான் கவாஜா 47, மார்னஸ் லபுஸ்ஷேன் 9, டிராவிஸ் ஹெட் 4, மிட்சேல் மார்ஷ் 16, அலெக்ஸ் கேரி 10 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் சரிந்த தனது அணியை மற்றொரு நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து காப்பாற்ற போராடினார். இருப்பினும் 77வது ஓவரின் 3வது பந்தை அடித்த அவர் டபுள் ரன் எடுக்க முயற்சித்த போது இங்கிலாந்தின் ஃபீல்டர் வேகமாக எடுத்து குறி பார்த்து ஸ்டம்பில் அடித்தார். அதை தவிர்ப்பதற்காக ஸ்மித் டைவ் அடித்தும் முன்னதாகவே பந்து ஸ்டம்ப்பில் அடித்தது போல இங்கிலாந்தினர் உணர்ந்ததால் அவுட் கேட்டனர். அதைத்தொடர்ந்து பெரிய திரையில் சோதிக்கப்பட்ட போது நிச்சயமாக அது அவுட் தான் என்று ரிக்கி பாண்டிங் நேரலையில் தெரிவித்தார்.

- Advertisement -

அதற்கேற்றார் போல் பக்கவாட்டு பகுதியிலிருந்து பார்க்கும் போது சூப்பர் மேன் போல ஸ்மித் டைவ் அடித்தும் வெள்ளை கோட்டை தொடுவதற்கு ஒரு இன்ச் முன்பாக ஜானி பேர்ஸ்டோ பெயில்ஸை நீக்கியது தெரிய வந்ததால் இங்கிலாந்தினர் ஆரவாரம் செய்தனர். அதன் காரணத்தால் நிச்சயமாக அவுட் தான் என்று நினைத்த ஸ்டீவ் ஸ்மித்தும் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். ஆனால் அப்போது கடமையில் கண்ணாக இருப்பான் சார் என்று சொல்வதற்கு எடுத்துக்காட்டாக இந்தியாவை சேர்ந்த பிரபலமான நிதின் மேனன் 3வது நடுவராக அதை உன்னிப்பாக அலசி ஆராய்ந்தார்.

குறிப்பாக பக்கவாட்டு பகுதியில் தெளிவாக தெரியாததால் தமக்கு 2 விதமான கோணமும் வேண்டுமென ஒளிபரப்பு நிறுவனத்திலும் கேட்டு வாங்கிய அவர் ஒன்றுக்கு பலமுறை சோதித்து பார்த்தார். அப்போது தான் பந்தை முழுமையாக பிடிப்பதற்கு முன்பாகவே ஜானி பைரஸ்ட்ரோ கைகள் ஸ்டம்பில் உரசியதால் ஒரு பெய்ல்ஸ் லேசாக நகர்ந்ததை அவர் கண்டறிந்தார். அதனால் அதை மீண்டும் ஆராய்ந்த போது பெய்ல்ஸ் நீக்கப்படுவதற்கு முன்பாகவே ஸ்மித் டைவ் அடித்து வெள்ளை கோட்டை தொட்டது தெரிய வந்தது.

- Advertisement -

அதன் காரணமாக அவுட்டில்லை என்று பெரிய திரையில் அறிவித்த அவர் ஸ்மித்தை தராசின் முள் போன்ற தீர்ப்பை வழங்கி காப்பாற்றியது இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் அணியினரை அமைதிப்படுத்தியது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் விராட் கோலி போன்றவர்களுக்கு தாறுமாறான தீர்ப்புகளை வழங்கி கெட்ட பெயரை வாங்கியுள்ள அவர் இந்த தருணத்தில் இந்தளவுக்கு துல்லியமான தீர்ப்பு வழங்கியது ரவிச்சந்திரன் அஸ்வினையும் இந்திய ரசிகர்களின் வியப்பில் ஆழ்த்தி பாராட்ட வைத்தது.

இதையும் படிங்க:வீடியோ : ஆமீரின் ஒரே ஓவரில் 25 ரன்கள் – 307 ஸ்ட்ரைக் ரேட்டில் முரட்டுத்தனமாக அடித்து ஃபைனலுக்கு அழைத்து சென்ற யூசுப் பதான்

அந்த தீர்ப்பின் உதவியும் தாண்டி 71 ரன்கள் மட்டுமே எடுத்த ஸ்மித்துடன் கேப்டன் கமின்ஸ் 36 ரன்களும் டோட் முர்ஃபி 34 ரன்களும் எடுத்ததால் முதலில் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 295 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அப்போது நிறைவுக்கு வந்த 2வது நாள் முடிவில் அந்த அணி 12 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக கிறிஸ் ஓக்ஸ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

Advertisement