ஆமீரின் ஒரே ஓவரில் 25 ரன்கள் – 307 ஸ்ட்ரைக் ரேட்டில் முரட்டுத்தனமாக அடித்து ஃபைனலுக்கு அழைத்து சென்ற யூசுப் பதான்

Yusuf Pathan
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டில் அடுத்த வீழ்ந்து கிடக்கும் கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கத்தில் ஜிம் ஆப்ஃரோ டி10 எனும் 10 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 20ஆம் தேதி துவங்கிய அந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் பங்கேற்றன. அதில் லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களை படித்த டர்பன் குவாலண்டர்ஸ் மற்றும் ஜோகனஸ்பர்க் பஃபலோஸ் ஆகிய அணிகள் குவாலிபயர் 1 போட்டியில் மோதின. ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஜோபர்க் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய டர்பன் 10 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 140/4 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிர்சா பைக் 20 (17) ரன்களும் ஆண்ட்ரூ பிளேட்சர் 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 39 (14) ரன்களும் எடுக்க கடைசி நேரத்தில் ஆசிப் அலி 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32* (12) ரன்களும் நிக் வெல்க் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 24* (9) ரன்களும் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர். ஜோபரக் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

முரட்டு இன்னிங்ஸ்:
அதைத்தொடர்ந்து 141 ரன்களை துரத்திய ஜோபர்க் அணிக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சீனியர் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் தமது நாட்டின் முகமது அமீர் பந்தில் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 17 (8) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் மற்றொரு தொடக்க வீரர் டாம் பாண்டன் 4, வில் ஸ்மித் 16, ரவி போபாரா 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 5.1 ஓவரில் 57/4 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய ஜோபர்க் அணிக்கு மிடில் ஆர்டரில் இந்தியாவின் நட்சத்திர சீனியர் வீரர் யூசுப் தான் அதிரடியாக விளையாடினார்.

குறிப்பாக 2017 சாம்பியன் டிராபியில் இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்த பாகிஸ்தானைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமீர் வீசிய 8வது ஓவரில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த சிக்சர்களை அடித்த அவர் 3வது பந்திலும் சிக்ஸர் அடித்து போட்டியில் திருப்புமுனையை உண்டாக்கினார். அதனால் தடுமாறி 5வது பந்தில் ஒயிட் வீசிய அமீரை மீண்டும் டபுள் ரன்கள் எடுத்த யூசுப் பதான் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து மொத்தமாக அந்த ஓவரில் 25 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அத்துடன் நிற்காத அவர் பிராட் எவான்ஸ் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர் மற்றும் 1 பறக்க விட்டு அரை சதம் கடந்ததால் வெற்றியை நெருங்கிய ஜோபர்க் அணிக்கு சத்தாரா வீசிய கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எதிர்புறம் இருந்த வங்கதேச வீரர் முஸ்பிக்கர் ரஹீம் முதல் பந்திலேயே சிங்கிள் எடுத்து தனது வேலையை செய்த நிலையில் 2வது பந்தில் சிக்சர் அடித்த பதான் 3வது பந்தில் பவுண்டரியும் 4வது பந்தில் முரட்டுத்தனமான சிக்ஸரும் 5வது பந்தில் மீண்டும் பவுண்டரியும் அடித்து ஒரு பந்தை மீதம் வைத்து தன்னுடைய அணிக்கு அட்டகாசமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அந்த வகையில் மொத்தமாக 4 பவுண்டரி 9 சிக்ஸருடன் 80* (26) ரன்களை 307.69 என்ற முரட்டுத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வெற்றி பெற வைத்த அவர் தனது அணியை ஃபைனலுக்கு அழைத்து சென்றார். அவருடன் முஸ்பிக்கர் ரஹீம் தனது பங்கிற்கு 14* (10) ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினார். 2007 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக 2011 உலக கோப்பையிலும் விளையாடி அசத்திய யூசுப் பதான் நாளடைவில் சுமாராக செயல்பட்டதால் ஐபிஎல் தொடரிலும் ஓய்வு பெற்றார்.

இதையும் படிங்க:இந்தியாவுக்காக நான் அறிமுகமானதே இப்படித்தான். பழைய நியாபகம் வந்துடுச்சி – வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித்

தற்போது லெஜெண்ட்ஸ் லீக் போன்ற தொடர்களில் விளையாடி வரும் அவர் இந்த தொடரின் குவாலிபயர் 1 நாக் அவுட் போட்டியில் முரட்டுத்தனமாக அடித்து தம்முடன் பிறந்த பழைய பவர் எப்போதும் போகாது என்பதை நிரூபித்து இந்திய ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

Advertisement