இந்தியாவுக்காக நான் அறிமுகமானதே இப்படித்தான். பழைய நியாபகம் வந்துடுச்சி – வெற்றிக்கு பிறகு பேசிய ரோஹித்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியானது ஜூலை 27-ஆம் தேதி பார்படாஸ் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது.

IND-vs-WI

- Advertisement -

இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். பின்னர் 115 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குறித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும் தான் இந்த போட்டியில் துவக்க வீரராக களம் இறங்காமல் ஏழாவது வீரராக களம் இறங்கியது ஏன்? என்றும் அதனால் தனக்கு கிடைத்த அனுபவம் குறித்தும் சில கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

Rohit-1

இது குறித்து அவர் கூறுகையில் : இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எளிமையாக சுருதியதால் அணிக்குள் வந்திருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நினைத்தே நான் அவர்களை முன்கூட்டியே களமிறக்கினேன். மேலும் இது போன்ற வாய்ப்புகள் அடிக்கடி கிடைக்காது என்பதனால் இதுபோன்ற ஒரு முடிவை நான் எடுத்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : 7 நாளில் கைகொடுத்த அதிர்ஷ்டம். இந்திய அணிக்கு அறிமுகமான முகேஷ் குமார் படைத்துள்ள – புதிய சாதனை

இந்த போட்டியில் ஏழாவது வீரராக நான் களமிறங்கியபோது எனது அறிமுக போட்டியே ஞாபகத்திற்கு வந்தது, ஏனெனில் நான் இந்திய அணிக்காக அறிமுகப்போட்டியில் களமிறங்கியது ஏழாவது இடத்தில் தான். அந்த நாட்கள் எனது கண் முன்னே வந்து சென்றது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement