7 நாளில் கைகொடுத்த அதிர்ஷ்டம். இந்திய அணிக்கு அறிமுகமான முகேஷ் குமார் படைத்துள்ள – புதிய சாதனை

Mukesh-Kumar
- Advertisement -

பெங்காலியை சேர்ந்த 29 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான முகேஷ் குமார் டொமஸ்டிக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தனது சிறப்பான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வந்ததால் அண்மைக்காலமாகவே இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்து வந்தார். ஆனாலும் அவருக்கு இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிட்டாமல் இருந்து வந்தது. அதோடு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக விளையாடிய அவர் டெல்லி அணிக்காக 10 போட்டிகளில் 7 விக்கெட் மட்டுமே எடுத்திருந்தார்.

Mukesh-Kumar-2

- Advertisement -

இருப்பினும் உள்ளூர் தொடர்களில் அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார். அப்படி இடம்பிடித்து விளையாடிய முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் இடம்பெறாவிட்டாலும், இரண்டாவது போட்டியின் போது ஷர்துல் தாகூருக்கு பதிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அந்த போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய முகேஷ் குமார் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

Mukesh-Kumar-1

இதன் காரணமாக முகமது சிராஜ் நாடு திரும்பியதால் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் களமிறங்கிய முகேஷ் குமார் அறிமுக ஒருநாள் போட்டியிலும் ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பார்படாஸில் நடைபெற்ற இந்த முதல் போட்டியில் இந்திய அணி 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேளையில் அந்த போட்டியில் அதனாசி விக்கெட்டை வீழ்த்தி முகேஷ் குமார் அசத்தியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் போட்டியில் அறிமுகமானதன் மூலம் அவர் ஒரு மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் குறைந்த இடைவெளியில் அறிமுகமான இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இரண்டே நாட்கள் இடைவெளியில் அறிமுகமாகியிருந்தார்.’

இதையும் படிங்க : IND vs WI : பாவங்க சஞ்சு சாம்சன், நாட்டுக்கு விளையாட இது தான் ஒரே வழி போல – இந்திய அணி நிர்வாகத்தை சாடிய பத்ரிநாத்

அவருக்கு அடுத்து சேகர் என்பவரும் அதே போன்று இரண்டு நாள் இடைவெளியில் இந்திய அணியின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகியுள்ளார். அதுதவிர்த்து இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளரான பயிற்சியாளரான கே.எஸ் பரத், குல்கரனி ஆகியோரை போன்று தற்போது முகேஷ் குமாரும் இரண்டாவது வீரராக 7 நாட்கள் இடைவெளியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement