அவங்க ப்ளானை உடைக்க தோனி ரெடியா இருப்பாரு.. சேப்பாக்கம் கோட்டையிலும் சென்னைக்கு ஆபத்திருக்கு.. ஹசி பேட்டி

Mike Hussey
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் 39வது லீக் போட்டி நடைபெறுகிறது. அதில் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது இடத்தில் உள்ள லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

கடைசியாக லக்னோவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட போட்டியில் சிஎஸ்கே பரிதாபமாக தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் ஜாம்பவான் எம்எஸ் தோனி 28* (9) ரன்கள் அடித்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தது மட்டுமே சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. ஆனால் இம்முறை லக்னோவை தங்களுடைய கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே எதிர்கொள்கிறது.

- Advertisement -

தயாராக தோனி:
இந்த சீசனில் இதுவரை சேப்பாக்கத்தில் விளையாடிய 3 போட்டிகளிலும் சிஎஸ்கே வென்றுள்ளது. எனவே தங்களுடைய கோட்டையில் நடைபெறும் இப்போட்டியில் லக்னோ அணியை சென்னை தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் தோனியை அவுட்டாக்க பல பவுலர்கள் பல்வேறு திட்டங்களுடன் வருவதாக சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மகத்தான ஃபினிஷரான தோனி அதையெல்லாம் சமாளித்து வெற்றியை பெற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாக ஹசி கூறியுள்ளார். அத்துடன் சிஎஸ்கே அணியின் அடுத்த 3 போட்டிகளும் சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே சேப்பாக்கத்தில் 3 போட்டியிலும் வெல்லலாம் என்று கனவு கண்டால் அது ஆபத்து என்று தெரிவிக்கும் ஹசி இது பற்றி பேசியது பின்வருமாறு. “தோனி தற்போது தனது கேரியரின் அற்புதமான நிலையில் உள்ளார்”

- Advertisement -

“தமக்கு மிகவும் கச்சிதமான நிலையில் உள்ள அவர் கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். இந்த தொடருக்காக அவர் நன்றாக பயிற்சி செய்து தயாராகி வந்துள்ளார். அவருக்கு எதிராக பவுலர்களும் வித்தியாசமான திட்டங்களுடன் வருவார்கள். ஏனெனில் அவர் வரலாற்றின் மிகச்சிறந்த ஃபினிசர். எனவே இது தோனியை பற்றி ஒரு அற்புதமான விஷயமாகும். கேரியரின் இந்த நிலையிலும் தொடர்ந்து பரிணாம வளர்ச்சியடைந்து முன்னேறும் அவர் தனக்கு எதிராக பந்து வீசும் பவுலர்களின் வேலையை கடினமாக்குகிறார்”

இதையும் படிங்க: பாண்டியா வேண்டாம்.. ரோஹித்துக்கு அப்றம் அவர் தான் இந்தியாவுக்கு சரியான டி20 கேப்டன்.. ஹர்பஜன் கருத்து

“ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதியில் 3 போட்டிகள் தொடர்ச்சியாக சேப்பாக்கத்தில் நடைபெறுவது முக்கியம். எங்களுடைய சொந்த மைதானத்தில் நாங்கள் நல்ல ரெகார்டை வைத்துள்ளோம். அங்கே 3 வெற்றிகளை விளையாடுவது எங்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கும். இருப்பினும் இப்போதே அதைப் பற்றி நினைத்து அதிகமாக சிந்திப்பது எங்களுக்கு ஆபத்தையும் கொடுக்கலாம்” என்று கூறினார்.

Advertisement