பாண்டியா வேண்டாம்.. ரோஹித்துக்கு அப்றம் அவர் தான் இந்தியாவுக்கு சரியான டி20 கேப்டன்.. ஹர்பஜன் கருத்து

Harbhajan Singh 2
- Advertisement -

ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 180 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதன் பின் சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஃபார்முக்கு திரும்பி சதமடித்து 104* (60) ரன்கள் கொடுத்தார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் 38*, ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே ராஜஸ்தான் எளிதாக வென்றது. அதனால் 5வது தோல்வியை பதிவு செய்த மும்பை பின்னடைவை சந்தித்தது.

- Advertisement -

ஹர்பஜன் கோரிக்கை:
மறுபுறம் சஞ்சு சாம்சன் தலைமையில் 8 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் ஜொலித்து வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் 8 போட்டிகளில் 314* ரன்களை 152.42 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ள சஞ்சு சாம்சன் அடுத்ததாக நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

அத்துடன் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாகவும் சஞ்சு சாம்சன் வளர்க்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கிளாஸ் என்பது எப்போதும் நிரந்தரம் என்பதற்கு ஜெய்ஸ்வால் இன்னிங்ஸ் சாட்சியாகும். ஜெய்ஸ்வால் ஃபார்ம் தற்காலிகமானது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை பற்றி எந்த விவாதமும் இருக்கக் கூடாது”

- Advertisement -

“சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடந்து செல்ல வேண்டும். அத்துடன் ரோகித் சர்மாவுக்கு பின் அவர் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாகவும் வளர்க்கப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2008இல் ஷேன் வார்னே தலைமையில் ஐபிஎல் கோப்பையில் முதலும் கடைசியுமாக வென்ற ராஜஸ்தான் அதன் பின் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கே திணறி வந்தது.

இதையும் படிங்க: வான்கடேவுக்கு வெளியே வண்டி ஓடல.. பாண்டியாவின் அந்த பவர் போய்டுச்சு போய்டுச்சு.. இர்பான் பதான் விமர்சனம்

ஆனால் சஞ்சு சாம்சன் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ராஜஸ்தானை சிறப்பாக வழி நடத்தி 2022 ஐபிஎல் தொடரின் ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். எனவே தற்சமயத்தில் இந்தியாவின் அடுத்த டி20 கேப்டனாக கருதப்படும் பாண்டியாவுக்கு பதிலாக ரோகித் சர்மாவுக்கு பின் சஞ்சு சாம்சன் வளர்க்கப்பட வேண்டும் என்று ஹர்பஜன் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement