வான்கடேவுக்கு வெளியே வண்டி ஓடல.. பாண்டியாவின் அந்த பவர் போய்டுச்சு போய்டுச்சு.. இர்பான் பதான் விமர்சனம்

Irfan Pathan 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் எளிதாக வீழ்த்தியது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் போராடி 179/9 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49 ரன்கள் எடுத்தனர்.

அதன் பின் 180 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு இளம் வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து 104* (60) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பினார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் 38*, ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே ராஜஸ்தான் எளிதாக வென்றது. அதனால் 7வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஜொலிக்கிறது.

- Advertisement -

பவர் குறைந்த பாண்டியா:
முன்னதாக இப்போட்டியில் இசான் கிசான் 0, ரோகித் சர்மா 6, சூரியகுமார் யாதவ் 10 ரன்களில் அவுட்டானதால் 20/3 என ஆரம்பத்திலேயே மும்பை திணறியது. அப்போது திலக் வர்மா 65, நேஹல் வதேரா 49, நபி 23 ரன்கள் அடித்து மும்பையை காப்பாற்றி ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அப்போது களமிறங்கிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சுமாராக விளையாடி 10 (10) ரன்களில் அவுட்டானார்.

அந்த வகையில் ஹர்திக் பாண்டியா நல்ல ஃபினிஷிங் கொடுக்கத் தவறியதால் கடைசியில் எக்ஸ்ட்ரா 20 ரன்களை எடுக்காதது மும்பையின் தோல்விக்கு முக்கிய காரணமானது. ஒரு கட்டத்தில் தோனிக்கு பின் இந்தியாவின் சிறந்த ஃபினிஷர் என்று பாராட்டப்பட்ட ஹர்திக் பாண்டியா காயத்தை சந்தித்ததிலிருந்தே சமீப காலங்களில் பேட்டிங்கில் அதிரடியாக விளையாட முடியாமல் தடுமாறி வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி ஃபினிஷிங் செய்யும் திறமை பாண்டியாவிடம் குறைந்து விட்டதாக இர்பான் பதான் விமர்சித்துள்ளார். குறிப்பாக பேட்டிங்க்கு சாதகமான வான்கடே கிரிக்கெட் மைதானத்திற்கு வெளியே பாண்டியா ஃபினிஷிங் செய்ய திணறுவதாக இர்ஃபான் பதான் கூறியுள்ளார். இது இந்திய அணிக்கும் பின்னடைவு என்று மறைமுக கவலையை தெரிவிக்கும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: நான்சென்ஸ் மாதிரி சிரிச்சுகிட்டே அதே தப்பை செய்யாதீங்க.. பாண்டியாவை மறைமுகமாக விளாசிய டேல் ஸ்டைன்

“ஹர்திக் பாண்டியாவின் அடிக்கும் திறமை கீழே சென்று கொண்டிருக்கிறது. அது பெரிய கண்ணோட்டத்தில் மிகப்பெரிய கவலைக்குரிய அம்சமாகும். வான்கடே மைதானத்தில் அவர் வித்தியாசமாக செயல்படுகிறார். ஆனால் சிறிய உதவி இல்லாத பிட்ச்கள் அவருக்கு கவலையாக உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த நிலையில் 5வது தோல்வியை பதிவு செய்துள்ள மும்பை புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் தவிப்பதால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement