நான்சென்ஸ் மாதிரி சிரிச்சுகிட்டே அதே தப்பை செய்யாதீங்க.. பாண்டியாவை மறைமுகமாக விளாசிய டேல் ஸ்டைன்

Dale Styen 3
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய 5வது தோல்வியை பதிவு செய்துள்ளது. ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் மும்பையை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ராஜஸ்தான் 7வது வெற்றியை செய்து புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 179/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக நேஹல் வதேரா 49, திலக் வர்மா 65 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 180 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 104* (60) ரன்கள் குவித்து ஃபார்முக்கு திரும்பினார். அவருடன் ஜோஸ் பட்லர் 35, கேப்டன் சஞ்சு சாம்சன் 38* ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரிலேயே ராஜஸ்தான் வெற்றி பெற்றது.

- Advertisement -

நான்சென்ஸ் வேலை:
அந்த நிலையில் தோல்விக்கான காரணம் என்ன என்று போட்டி முடிந்ததும் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்கப்பட்டது. அப்போது எங்கள் வீரர்கள் மீது குறை சொல்லவில்லை இந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு அடுத்த போட்டியில் வெல்வோம் என்று சொன்ன ஹர்டிக் பாண்டியா வழக்கம் போல சிரித்துக் கொண்டே சென்றார்.

முன்னதாக இந்த வருடம் ஆரம்பம் முதலே தோல்விகளை சந்திக்கும் போதெல்லாம் பார்ப்பதற்கு வெளியே சிரிக்கும் ஹர்திக் பாண்டியா தன்னை தோனி போல் கூலாக வைத்திருக்க முயற்சிப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் “முன்னேறுவோம்” என்று வாயில் மட்டுமே சொல்லும் ஹர்திக் பாண்டியா சொல்வதாக டேல் ஸ்டைன் கூறியுள்ளார். ஆனால் கேப்டனாக அதை வேலையில் செய்து காட்டாத பாண்டியா மும்பை அணியில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்று டேல் ஸ்டைன் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

எனவே தோல்வியை சந்தித்த பின் சிரித்துக் கொண்டே சாக்கு போக்கை சொல்லும் பாண்டியா மீண்டும் நான்சென்ஸ் போல அதை தவறை செய்வதாக டேல் ஸ்டைன் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் பாண்டியாவின் பெயரை குறிப்பிடாமல் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வீரர்கள் உண்மையாக தங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நேர்மையாக சொல்லும் நாளை நான் எதிர்பார்க்கிறேன்”

இதையும் படிங்க: தோனிக்கு ஒரு நியாயம் விராட் கோலிக்கு ஒரு நியாயமா? அம்பயர்களை விளாசிய முகமது கைப்

“அதை விட்டுவிட்டு வழக்கமான பாதுகாப்பான விஷயத்தை சொல்லி நம்மையும், மனதையும், ஊமையாக்கி அடுத்த ஆட்டத்தில் தோற்றுவிட்டு சிரித்துக் கொண்டே அந்த முட்டாள்தனத்தை (நான்சென்ஸ்) மீண்டும் மீண்டும் செய்கிறோம்” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் மீண்டும் பரிதாப தோல்வியை சந்தித்த மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

Advertisement