76 ரன்ஸ்.. போல்ட் மிரட்டல்.. காவ்யா அணியின் ஹாட்ரிக் கனவை தூளாக்கிய எம்ஐ.. 11வது கோப்பை வென்று சாதனை

- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ டி20 தொடரின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அந்தத் தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய எம்ஐ கேப்டன் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிகள் மோதிய மாபெரும் இறுதிப்போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. ஜொஹனஸ்பர்க் வாண்டர்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 51 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த ரியான் ரிக்கல்ட்டன் 33 (15), ராசி வேன் டெர் டுஷன் 23 ரன்கள் விளாசி அவுட்டானார்கள். அடுத்ததாக வந்த ரீசா ஹென்றிக்ஸ் டக் அவுட்டானார். ஆனால் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய கோனர் 39 (26), ஜார்ஜ் லிண்டே 20 (14), தேவாலட் ப்ரேவிஸ் 38 (18) ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

போல்ட் மிரட்டல்:

அதனால் 20 ஓவரில் எம்ஐ 181-8 ரன்கள் எடுத்த நிலையில் சன்ரைசர்ஸ் அணிக்கு அதிகபட்சமாக மார்க்கோ ஜான்சன், ரிச்சர்ட் கிலீசன், லியம் டாசன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்ததாக 182 ரன்களை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு டேவிட் பேடிங்கம் 5, டீ ஜோர்சி 26 ரன்களில் ரபாடா, கேப்டன் ரசித் கான் பந்து வீச்சில் அவுட்டானார்கள். மூன்றாவது இடத்தில் வந்த ஜோர்டன் ஹெர்மன் 1 ரன்னில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்ததாக வந்த கேப்டன் ஐடன் மார்க்ரம் 6 ரன்களில் அவுட்டான நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ட்ரிஷன் ஸ்டப்ஸை 15 (15) ரன்களில் ட்ரெண்ட் போல்ட் காலி செய்தார். இறுதியில் டாம் ஆபேல் 30 ரன்கள் எடுத்தும் மற்ற வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 18.4 ஓவரில் 105 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியை சுருட்டிய எம்ஐ 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

11வது கோப்பை:

அதனால் எஸ்ஏ தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று எம்ஐ அணி சாதனை படைத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, ஜார்ஜ் லிண்டே 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அவர்களை விட 4 ஓவரில் வெறும் 9 ரன்கள் மட்டுமே கொடுத்த போல்ட் 2 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்றுள்ள மும்பை வெஸ்ட் இண்டீஸில் நடைபெறும் சிபிஎல் தொடரில் 2, மகளிர் ஐபிஎல், அமெரிக்கா லீக், துபாய் லீக் தொடர்களில் தலா ஒரு கோப்பைகளை வென்றுள்ளது.

இதையும் படிங்க: 78 ரன்ஸ்.. பிலிப்ஸ் அபார சாதனை.. பாகிஸ்தானை சாய்த்த நியூஸிலாந்து.. ரவீந்திராவுக்கு ரசிகர்கள் பிராத்தனை

இதையும் சேர்த்து உலகளவில் மும்பை அணி மொத்தம் 11வது கோப்பையை வென்று அசத்தி வருகிறது. மறுபுறம் சன் ரைசர்ஸ் தொடரில் 2023, 2024 ஆகிய அடுத்தடுத்த தொடர்களில் கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை ஹாட்ரிக் கோப்பையை வெல்ல முடியாததால் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பரிதாபத்தை சந்தித்தார்.

Advertisement