இது ஐசிசி உ.கோ மாதிரி தெரியல.. பிசிசிஐ அந்த சதி பண்ணிடாங்க.. ஃபைனலில் இந்தியாவை பாத்துக்குறோம்.. பாக் கோச் பேட்டி

Mickey Arthur
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி உலகின் மிகப்பெரிய அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 12வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்று முதலில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 50, முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார்.

- Advertisement -

ரோஹித்தின் உலக சாதனை:
அவருடன் கில் 16, விராட் கோலி 16, ஸ்ரேயாஸ் ஐயர் 53*, ராகுல் 19* ரன்கள் எடுத்ததால் 30.3 ஓவரிலேயே இலக்க எட்டிப்பிடித்து எளிதாக வென்ற இந்தியா உலகக்கோப்பை வரலாற்றில் 8வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து இந்திய ரசிகர்களை கொண்டாட வைத்தது. அதனால் பங்கேற்ற 3 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து புள்ளிப்பட்டியலிலும் இந்தியா முதலிடத்திற்கு முன்னேறிய நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

இந்நிலையில் இப்போட்டியில் இந்தியா அசத்திய தருணங்களில் “சக்தே இந்தியா” பாடல் ஒளிபரப்பப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அசத்திய தருணங்களில் “தில்தில் பாகிஸ்தான்” உத்வேக பாடல் ஒளிபரப்புப்படவில்லை என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர் விமர்சித்துள்ளார். அந்த வகையில் தங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு மற்றும் உத்வேகம் கிடைக்கவிடாமல் பிசிசிஐ தடுத்து விட்டதாக விமர்சிக்கும் அவர் இன்னும் பாகிஸ்தான் அணி தங்களுடைய உண்மையான பலத்தை காட்டவில்லை என்று கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே எஞ்சிய போட்டிகளில் வென்று ஃபைனலில் இந்தியாவை சந்திப்போம் என்று சவால் விடுக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இன்று இரவு நடைபெற்றது ஐசிசி நடத்திய போட்டியை போல் தெரியவில்லை என்பதே உண்மையாகும். மாறாக அது பிசிசிஐ நடத்திய இருதரப்பு தொடரை போல் இருந்தது. ஏனெனில் தில்தில் பாகிஸ்தான் பாடலை நான் இப்போட்டியில் எந்த இடத்திலும் மைதானத்தில் ஒலிபரப்பி கேட்கவில்லை”

இதையும் படிங்க: நாங்க நெனைச்சதே நடக்கல. இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல – பாபர் அசாம் வருத்தம்

“அதுவும் உங்களுடைய வெற்றியில் பங்காற்றக்கூடியதாகும். இருப்பினும் இதை நான் சாக்காக சொல்லவில்லை. இப்போட்டியில் நாங்கள் சுமாராக செயல்பட்டோம். ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தங்களுடைய தரத்திற்கு விளையாடவில்லை. இந்த இந்திய அணி சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக ராகுல், ரோஹித் சிறப்பாக வழிநடத்தும் இந்திய அணி அனைத்திலும் பூர்த்தி அடைந்துள்ளது. அவர்களை ஃபைனலில் நான் மீண்டும் சந்திக்க காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

Advertisement