நாங்க நெனைச்சதே நடக்கல. இப்படி நடக்கும்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கல – பாபர் அசாம் வருத்தம்

Babar-Interview
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 12-வது முக்கிய லீக் ஆட்டமானது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக எட்டாவது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.

அதோடு மட்டுமின்றி இந்த உலக கோப்பையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் தங்கள் அணி பந்து வீசும் என்று அறிவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெடுகளையும் இழந்து 191 ரன்களை மட்டுமே குவித்தது. ஒரு கட்டத்தில் 155 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த வேளையில் அடுத்த 36 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்து மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக பாபர் அசாம் 50 ரன்களையும், ரிஸ்வான் 49 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.3 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தங்களது தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் :

நாங்கள் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கினோம். அதிலும் குறிப்பாக நானும் இமாம் உல் ஹக்கும் மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டோம். அதன் பிறகு ரிஸ்வானும் நானும் இணைந்து நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் திடீரென இவ்வளவு பெரிய சொதப்பல் நிகழ்ந்து இறுதியில் நாங்கள் ஆல் அவுட் ஆவோம் என்று எதிர்பார்க்கவில்லை.

இதையும் படிங்க : என்னோட 86 ரன் இல்ல.. பாகிஸ்தானை தோற்கடிக்க அவங்க தான் காரணம்.. கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு

நாங்கள் போட்டியை ஆரம்பித்த இடத்தில் இருந்து பார்க்கும்போது 280 முதல் 290 ரன்கள் வரை அடிக்கலாம் என்று நினைத்தோம். ஆனால் இந்திய வீரர்கள் எங்களை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதோடு இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாபர் அசாம் தோல்வி குறித்து வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement